பக்கம் எண் :

 28. திருச்சோற்றுத்துறை489


மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 4

298. பிறையு மரவும் புனலுஞ் சடைவைத்து
மறையு மோதி மயான மிடமாக
உறையுஞ் செல்வ முடையார் காவிரி
அறையுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 5

299. துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல்பயின்றாடும்
அடிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 6

__________________________________________________

ஒழியுமாறு இப்பிறப்பைப் பயன்படுத்த எண்ணும் அறிவுடையவர்களே, துணித்தலைச் செய்வதும், போர் செய்தற்கு உரியதுமான விளங்கும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவரும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமான, சிவபெருமான் மேவிய நீண்ட பொழில்கள் சூழ்ந்த அழகிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோமாக.

கு-ரை: பிணிகொள் ஆக்கை - நோயுற்ற உடல். பிறப்புளீர் - நோயுற்ற இவ்வுடல் ஒழிக்க எடுத்த இப்பிறவியைப் பயன்படுத்தும் ஞானிகளே!

5. பொ-ரை: இளம் பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடையில் அணிந்து, நான்மறைகளை ஓதிக் கொண்டு, சுடுகாட்டைத் தமது இடமாகக் கொண்டு உறையும், வீடு பேறாகிய செல்வத்தை உடைய இறைவரின் காவிரி நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.

கு-ரை: அணியல்லாத பாம்பு மதி இவற்றைப் பூண்டு, கரிகாடு இடமாகக்கொண்டும் செல்வமுடையார் என்றது சுவைபடக் கூறியது. அறையும் - மோதும்.

6. பொ-ரை: உடுக்கைகள் பலவற்றோடு முழவங்கள் ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப் பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை அரங்காகக் கொண்டு, பொருத்தமான தாளச் சதிகளோடு பாடல்கள்