பக்கம் எண் :

 29. திருநறையூர்ச்சித்தீச்சரம்491


302. தொழுவா ரிருவர் துயர நீங்கவே
அழலா யோங்கி யருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியான் மிக்கவெம்
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. 9

303. கோது சாற்றித் திரிவா ரமண்குண்டர்
ஓது மோத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே. 10

304. அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
சிந்தை செய்ம்மி னடியா ராயினீர்.

__________________________________________________

9. பொ-ரை: தம் செருக்கடங்கித் தம்மைத் தொழுத திருமால் பிரமன் ஆகிய இருவர்க்கும், அழலுருவாய் ஓங்கி நின்று அருள்களைச் செய்தவன், விரும்பி உறையும் விழாக்கள் நிகழும் வீதிகளில் வேத விதியோடு வாழும் மக்களை உடைய சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

கு-ரை: தொழுவார் இருவர் - தம் செருக்கு அடங்கித் தொழுத அயனும் திருமாலும். மறுகு - வீதி. விதி - வேதவிதி.

10. பொ-ரை: நெஞ்சே! குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவராகிய சமண் குண்டர்கள் ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது, சிவாகம நெறி நின்று, நினைப்பவர் கருதும் திருவுருவோடு வெளிப்பட்டருளும் முதல்வனாகிய சிவபிரானது சோற்றுத்துறையை நாம் சென்றடைவோம்.

கு-ரை: கோது - குற்றம். ஓதும் ஓத்தை - ஓதுகின்ற பிடக வேதத்தை. நீதி நின்று - சிவாகம நெறிக்கண் நின்று. நினைவார் வேடம் ஆம் ஆதி - தியானிப்பவர்கள் தியானித்த உருவிற்சென்று அருளும் முதல்வன்.

11. பொ-ரை: அடியவர்களாக உள்ளவர்களே! அழகு தண்மை ஆகியவற்றோடு விளங்கும் திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள். சந்த இசையால்