பக்கம் எண் :

 29. திருநறையூர்ச்சித்தீச்சரம்495


பாடல் வண்டு பயிலு நறையூரில்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 4

309. உம்ப ராலு முலகின் னவராலும்
தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
நண்பு லாவு மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 5

310. கூரு லாவு படையான் விடையேறி
போரு லாவு மழுவா னனலாடி
பேரு லாவு பெருமா னறையூரில்
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே. 6

__________________________________________________

உடைய நறையூரில் பெரியோர் வணங்கித் துதிக்கும் சித்தீச்சரத்தைத் தெளிவாயாக.

கு-ரை: நீடவல்ல - மிகமேலும் வளரவல்ல. சேடர் - பெருமையுடையவர்.

5. பொ-ரை: நெஞ்சே! தேவர்களாலும், உலகிடை வாழும் மக்களாலும் தனது பெருமைகளை அளவிட்டுக் கூறுவதற்கு அரியவனாகிய சிவபிரானது ஊராய், நட்புத் தன்மையால் மேம்பட்ட மறையவர்கள் வாழும் திருநறையூரில் சிவபிரான் எழுந்தருளிய செம்பொன்மயமான சித்தீச்சரத்தையே தெளிவாயாக.

கு-ரை: உம்பர் - தேவர். உலகின்னவர் - மக்கள். உம்பர்கள் மலத்தான் மறைப்புண்டு இன்பத்துள் மயங்கி இறைவனை மறந்து, தம் பெருமை யொன்றையே நினைத்திருப்பவராதலின் அவர்களால் இவன் பெருமை அளக்கமுடியாதாயிற்று. மக்கள் மலத்தான் கட்டுண்டு ஆன்மபோதமிக்கிருத்தலின் மக்களால் அளக்கமுடியாதாயிற்று.

6. பொ-ரை: கூர்மைமிக்க சூலப்படையை உடையவனாய், விடை மீது ஏறிப் போருக்குப் பயன்படும் மழுவாயுதத்தை ஏந்தி, அனல்மிசை நின்றாடி, ஏழுலகிலும் தன் புகழ் விளங்க நிற்கும் சிவபெருமான் திருநறையூரில் விளங்கும் சித்தீச்சரமே நாம் வழிபடற்குரிய இடமாகும்.