பக்கம் எண் :

496திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


311. அன்றி நின்ற வவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரில்
சென்று சித்தீ்ச் சரமே தெளிநெஞ்சே. 7

312. அரக்க னாண்மை யழிய வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரில்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 8

313. ஆழி யானு மலரி னுறைவானும்
ஊழி நாடி யுணரார் திரிந்துமேல்
சூழ நேட வெரியா மொருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 9

__________________________________________________

கு-ரை: கூர் உலாவு படை - கூர்மை மிக்க சூலப்படை. பேர் - புகழ். நறையூரில் சேரும் இடம் சித்தீச்சரம் ஆம் எனக்கூட்டுக.

7. பொ-ரை: நெஞ்சே! தன்னோடு வேறுபட்டு நிற்கும் அவுணர்களின் முப்புரங்களையும் எய்தழித்த வெற்றியோடு கூடிய வில்லை உடைய குற்றமற்றவன் விரும்பும் ஊர் ஆகிய, மணம் நிலைபெற்று வீசும் பொது மன்றங்களை உடைய திருநறையூருக்குச் சென்று, அங்குப் பெருமான் எழுந்தருளிய சித்தீச்சரத்தைத் தெளிந்து வழிபடுக.

கு-ரை: அன்றி - வேறுபட்டு. மன்றில் - பொதுச்சபைகளில்.

8. பொ-ரை: நெஞ்சே! இராவணனது வலிமை கெடுமாறு கயிலை மலையால் ஊன்றி அடர்த்த கால் விரலை உடைய சிவபிரான் விரும்புவது, பரவிய புகழாளர் வாழ்வது ஆகிய திருநறையூரில் விளங்கும் சிவபிரானது சித்தீச்சரத்தைத் தெளிவாயாக.

கு-ரை: பரக்குங் கீர்த்தி - மேலும் மேலும் பரவும் புகழ். திரு - சிவஞானம்.

9. பொ-ரை: நெஞ்சே! சக்கராயுதத்தை உடைய திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், உணராதவனாய், ஓர்