பக்கம் எண் :

 30. திருப்புகலி497


314. மெய்யின் மாசர் விரிநுண் டுகிலிலார்
கையி லுண்டு கழறு முரைகொள்ளேல்
உய்ய வேண்டி லிறைவன் னறையூரில்
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே. 10

315. மெய்த்து லாவு மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச் சரத்தையுயர்காழி
அத்தன் பாத மணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

ஊழிக்காலம் அளவும் திரிந்து சுற்றும் முற்றும் மேலும் கீழுமாய்த் தேட எரியுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமானது சிறப்புமிக்க இடமாகிய திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நினைவாய்.

கு-ரை: ஊழி நாடி - ஓரூழிக்காலம் தேடி. என்றது நீண்ட காலம் தேடியும் என்று அவர்கள் முயற்சியின் பயனற்ற தன்மையை விளக்கியவாறு. சூழும் - சுற்றிலும். நேட - தேட.

10. பொ-ரை: உடம்பின்கண் அழுக்குடையவர்களும், விரித்துக் கட்டும் நுண்ணிய ஆடைகளை அணியாதவர்களும், கைகளில் பலி ஏற்று உண்டு திரிபவர்களுமாகிய சமணர்கள் இடித்துக் கூறும் உரைகளைக் கொள்ளாதீர். நீர் இப்பிறப்பில் உய்தி பெற விரும்பினால், சிவபிரான் எழுந்தருளிய திருநறையூரில் செய்தமைத்த சித்தீச்சரத்தைச் சென்று வழிபடுமின். அதுவே சிறந்த தவமாம்.

கு-ரை: மாசர் - அழுக்குடையவர். துகிலிலார் - திகம்பரர். சித்தீச்சரமே தவமாம் செய்யும் எனக்கூட்டுக.

11. பொ-ரை: வாய்மையே பேசி வாழும் மறையவர் வாழும் திருநறையூரின்கண் சித்தன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவரெுமானது சித்தீச்சரத்தை, மேலான காழி மாநகரில் விளங்கும் சிவபிரானது திருப்பாதங்களைத் தனது திருமுடிக்கு அணியாகக் கொண்ட ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடிப் பரவப் பாவங்கள் நீங்கும்.

கு-ரை: மெய்த்து - உண்மையான வாழ்வுடன். உண்மை கூறி