பக்கம் எண் :

498திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


என்றுமாம். சித்தன் இத்தலத்து இறைவன் திருநாமம். காழியத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் - சீகாழியில் தோணியப்பரது திருவடி ஞானம் பெற்ற சம்பந்தன்.

திருவெண்காட்டுப் புராணம்

இருகுடங்கொண் டொருகுடத்தில் வெண்பொடி பெண்

கொடியாக வெழுவித் தோனைத்

திருவருளாற் பாலருந்தி யேடதனை

யாற்றிலிட்ட தெய்வக் கோனை

அருமறையின் தலைக்கொழுந்தை ஆகமத்தின்

தனிமுதலை அடியார் வாழ்வைப்

பரசமய கோளரியைக் கௌணியர்சூ

ளாமணியைப் பகருவோமே.

- சைவ எல்லப்ப நாவலர்.

திருவாவடுதுறைப் புராணம்

பரசமயர் வயிறெரியத் தமிழ்ப்பதிகம்

தீயிலிட்டுப் பசுமை யாக்கிக்

கரவுடைய பொய்ச்சமணர் கழுவேறப்

பாசுரம்வை கையின்மீ தேற்றிப்

புரவலன்கூ னிமிர்த்தினிய தமிழ்நாட்டைச்

சோணாடு போலச் செய்த

சிரபுரக்கோன் சிற்றடிப்பொற் றாமரைப்போ(து)

எப்போதும் சிரமேற் கொள்வாம்.

- சாமிநாத முனிவர்.