பக்கம் எண் :

 33. திருஅன்பிலாலந்துறை515


346. முற்றா ததொர்பான் மதிசூ டுமுதல்வன்
நற்றா மரையா னொடுமால் நயந்தேத்தப்
பொற்றோ ளியுந்தா னும்பொலிந் தழகாக
எற்றே யுறைகின் றவிடை மருதீதோ. 9

347. சிறுதே ரருஞ்சில் சமணும் புறங்கூற
நெறியே பலபத் தர்கள்கை தொழுதேத்த
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறியார் மழுவா ளனிடை மருதீதோ. 10

348. கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்

__________________________________________________

9. பொ-ரை: முற்றாத பால் போன்ற இளம்பிறையை முடிமிசைச் சூடிய முதல்வனாய், நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், திருமாலும் விரும்பித் தொழ, உமையம்மையும் தானுமாய்ச் சிவபிரான் அழகாகப் பொலிந்து உறைகின்ற இடைமருது என்னும் தலம் இதுதானோ?

கு-ரை: பால்மதி - பால்போல் வெள்ளியபிறை. மால் நயந்து ஏத்த எனப் பிரிக்க. உறைகின்ற இடைமருது ஈதோ எற்றே எனக் கூட்டுக. எற்று எத்தன்மைத்து; என வியந்து கூறியவாறு.

10. பொ-ரை: சிறுமதியாளராகிய தேரர்களும், சிற்றறிவினராகிய சமணர்களும், புறங்கூறித் திரிய, சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதிக்கப் பகைவரைக் கொன்றொழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான் எழுந்தருளிய,. மணம் கமழ்ந்துவரும் காவிரிநதியின் அழகிய கரைமேல் உள்ள இடைமருது என்னும் தலம் இதுதானோ?

கு-ரை: புறச்சமயிகள் புறங்கூறுகிறார்கள்; பக்தர்கள் கைதொழுது பயன்கொள்ளுகிறார்கள் என்று இறைவனுடைய வேண்டுதல் வேண்டாமையையும், ஆன்மாக்கள் அவர் அவர் பரிபாகத்திற்கேற்பப் பலன் கொள்ளுகிறார்கள் என்பதையும் அறிவித்தபடி. தேரர் - புத்தர். எறியார் மழுவாளன் - எறியுந் தன்மைவாய்ந்த மழுவைத் தாங்கியவன்.

11. பொ-ரை: இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை