353. நீடும் புனற்கங் கையுந்தங்
கமுடிமேல்
கூடும் மலையா ளொருபா கமமர்ந்தார்
மாடும் முழவம் மதிரம் மடமாதர்
ஆடும் பதியன் பிலாலந் துறையாரே. 5
354. நீறார் திருமே னியரூ
னமிலார்பால்
ஊறார் சுவையா கியவும் பர்பெருமான்
வேறா ரகிலும் மிகுசந் தனமுந்தி
ஆறார் வயலன் பிலாலந் துறையாரே. 6
__________________________________________________
ஓத அவ்வொலி பல இடங்களிலும் ஒலிக்கும்
நீர்வளம்மிக்க அன்பிலாலந்துறை இறைவராவார்.
கு-ரை: இது இத்தலத்திறைவன்
பகைநீக்கி ஆளும் பண்பினன் என்கின்றது. உறவைத்த
- பகைநீக்கி ஒருங்கே பொருந்த வைத்த. நறை - நல்லமணம்.
வன்னி - வன்னிப் பத்திரம். வேதியர் மறைபலவும்
ஓத அவ்வொலிசென்று அறையும் ஆலந்துறை எனக் கூட்டுக.
5. பொ-ரை: முடிமேல் பெருகிவரும்
நீரை உடைய கங்கை நதியையும் தங்குமாறு அணிந்து,
ஒருபாகமாகத் தம்மைத் தழுவிய மலைமகளைக் கொண்டுள்ள
பெருமானார், பல இடங்களிலும் முழவுகள் ஒலிக்க, இளம்
பெண்கள் பலர் நடனங்கள் புரியும் அன்பிலாலந்துறை
இறைவராவார்.
கு-ரை: இது அன்பிலாலந்துறை இறைவர்,
கங்கையை முடி மேல் வைத்து உமையாளை ஒருபாகம் வைத்துளார்
என்கின்றது. இவர் போகியாய் இருப்பதற்கேற்ற
தலம், முழவம் அதிர மடமாதர் ஆடும் பதியாய்ப் போகபூமியாய்
இருப்பதைக் குறித்தவாறு. மாடு - பக்கம்.
6. பொ-ரை: திருநீறு அணிந்த திருமேனியரும்,
குற்றம் அற்றவர்களின் உள்ளங்களில் பொருந்திய
சுவையாக இனிப்பவருமாகிய தேவர் தலைவர், வேறாகப்
பெயர்ந்து வரும் அகில் மரங்களையும் உயர்ந்த சந்தன
மரங்களையும் அடித்துவரும் ஆற்று நீர் பாயும் வயல்களை
உடைய அன்பிலாலந்துறை இறைவர் ஆவார்.
கு-ரை: இது குற்றமே இல்லாத நற்றவர்பால்
ஊறுஞ் சுவையாய் விளங்குபவர் என்கின்றது. ஊனம் இல்லார்பால்
ஊறு ஆர் சுவை
|