பக்கம் எண் :

 35. திருவீழிமிழலை529


372. புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமுநெஞ்சே. 2

373. அழவல் லவரா டியும்பாடி
எழவல் லவரெந் தையடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
தோழவல் லவர்நல் லவர்தொண்டே 3

374. உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் மரையார்த் தவழகன்

__________________________________________________

2. பொ-ரை: மலரால் அலங்கரிக்கப்பட்ட முறுக்குக்களை உடைய சிவந்த சடைமுடி மீது ஆரவாரித்து வந்து ஒப்பற்ற கங்கை நதியை மறைத்து வைத்துளள சிவபிரான் உறையும், தீவினை இல்லாத மக்கள் வாழும் திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சமும் ஒரு நெஞ்சமோ?

கு-ரை: வீழிமிழலையை நினையாதவர் நெஞ்சம் நெஞ்சா என்கின்றது. புனைதல் - முடித்தல், கனைதல் - ஒலித்தல். வினையில்லவர் - இயல்பாகவே வினையில்லாதவர். நெஞ்சத்தின் தொழில் நினைய வேண்டியவற்றை நினைவதாயிக்க, அது செய்யாமையின் நெஞ்சமும் நெஞ்சே என இகழ்ந்து கூறியவாறு.

3. பொ-ரை: அழவல்லவரும், ஆடியும் பாடியும் எழவல்லவரும் எந்தையாகிய இறைவன் திருவடிமேல் விழ வல்லவருமாய் அடியவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையைத் தொழ வல்லவரே நல்லவர். அவர் தொண்டே நற்றொண்டாம்.

கு-ரை: இது அழுதும், ஆடியும், பாடியும், விழுந்தும் தொழவல்லவர் தொண்டில் நல்லராம் என்கின்றது. வல்லவர் என்பன நான்கும் அருமைவிளக்கி நின்றன. அடிமேல் விழுதல் - தன்வசமற்று ஆனந்தமேலீட்டால் விழுதல்.

4. பொ-ரை: வலிமையை வெளிப்படுத்தி நிற்கும் சிவந்த சடைமுடி மீதும் இடையிலும், பாம்பை அணிந்தும் கட்டியும் உள்ள அழகனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், பொழில்கள் விரவிச்