விரவும் பொழிலவீ
ழிம்மிழலை
பரவும் மடியா ரடியாரே. 4
375. கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண் டறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவா ருயர்வாரே. 5
376. சடையார் பிறையான்
சரிபூதப்
படையான் கொடிமே லதொர்பைங்கண்
விடையா னுறைவீ ழிம்மிழலை
அடைவா ரடியா ரவர்தாமே. 6
__________________________________________________
சூழ்ந்ததுமான திருவீழிமிழலையைப் பரவித்
துதிக்கும் அடியவரே அடியவராவர்.
கு-ரை: இது வீழிமிழலையைத் தொழும்
அடியாரே அடியார் என அடியார் இயல்பை
விளக்குகின்றது. உரவம் - வலிமை.
5. பொ-ரை: கரியதாகிய நஞ்சினை உண்டு
அதனை அணியாக நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளியதும்,
வரிகளை உடைய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்கள்
விரிந்த மாலைபோலக் கொத்தாக மலரும் சோலைகளால்
சூழப்பெற்றதும் ஆகிய திருவீழிமிழலையைத் தமக்கு
உரிய தலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.
கு-ரை: இது இத்தலத்தை உரிமையோடு நினைவார்
உயர்வார் என்கின்றது. வரிதாகிய வண்டு - வரிகனையுடையதாகிய
வண்டு ‘பொறிவரி வண்டினம்‘ என்பது காண்க. உரியதா
என்பது உரிதா எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது,
உரித்து உரிது போலவும், வரித்து வரிது போலவும் என்க.
6. பொ-ரை: சடைமிசைச்சூடிய பிறைமதியை
உடையவனும், இயங்கும் பூதப் படைகளை உடையவனும்,
கொடிமேல் பசிய கண்களை உடைய ஒற்றை விடையேற்றை
உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் திருவீழிமிழலையை
அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர். தாம், ஏ
அசைநிலை.
|