377. செறியார் கழலுஞ்
சிலம்பார்க்க
நெறியார் குழலா ளொடுநின்றான்
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
அறிவா ரவலம் மறியாரே. 7
378. உளையா வலியொல்
கவரக்கன்
வளையா விரலூன் றியமைந்தன்
விளையார் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவா ரடியாரே. 8
379. மருள்செய் திருவர்
மயலாக
அருள்செய் தவனா ரழலாகி
__________________________________________________
கு-ரை: இது இத்தலத்தை அடைவாரே அடியார்
என்கின்றது. சரி - இயங்குகின்ற. பைங்கண் - பசியகண்.
பசுமை ஈண்டு இளமை குறித்து நின்றது-
7. பொ-ரை: கால்களிற் செறிந்த
கழல், சிலம்பு ஆகிய அணிகள் ஆர்க்கச் சுருண்ட கூந்தலை
உடைய உமையம்மையோடு நின்றருளும் சிவபிரான் எழுந்தருளியதும்
மணம் கமழும் பொழிலகளால் சூழப்பெற்றதுமான திருவீழிழலையைத்
தியானிப்பவர் அவலம் அறியார்.
கு-ரை: இது இத்தலத்தை யறிவார்,
துன்பம் அறியார் என்கின்றது. செறி - வளை. செறி ஆர்
கழலும் சிலம்பு ஆர்க்க என்பதில் எண்ணும்மையை
ஏனையவிடத்தும் கூட்டுக. நெறியார் குழல் - சுருண்ட கூந்தல்,
அறிவார் - தியானிப்பார்கள்.
8. பொ-ரை: மிக வருந்திக் கயிலை
மலையைப் பெயர்த்த இராவணனது வலிமை கெடுமாறு தன்
காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபிரான்
எழுந்தருளியதும், விளைவு மிகுந்த வயல்களை உடையதுமான
திருவீழிமிழலையை நினைந்து வருபவர் சிறந்த அடியவராவர்.
கு-ரை: இத்தலத்தை நெருங்குவாரே
அடியார் என்கின்றது. உளையா - வருந்தி. அளையா -
அளைந்து; பொருந்தி. உளையா வலி - பண்டு வருந்தா வலிமையுமாம்.
9. பொ-ரை: திருமால் பிரமன் ஆகிய
இருவரும் அஞ்ஞானத்தினால் அடிமுடிகாணாது மயங்க, அரிய
அழலுருவாய் வெளிப்பட்டு
|