பக்கம் எண் :

536திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


386. உமையா ளொருபா கமதாகச்
சமைவா ரவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே. 5

387. தலையின் றொடைமா லையணிந்து
கலைகொண்ட டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே . 6

388. வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங்கொடுசே ருமையாறே. 7

_________________________________________________

மக்கள் கண்ணுக்கு மறைந்து வதியும் தேவர்கள். தம்மில் அறையும் ஒலி - தமக்குள் பேசிக்கொள்ளும் ஒலி.

5. பொ-ரை: உமையம்மை ஒருபாகத்தே விளங்கப் பொருந்தியவராகிய சிவபெருமான் சாரும் இடம், மலையிடையே உள்ள மூங்கில்கள் முத்துக்களைச் சொரிய அவை காவிரியாற்றில் பொருந்தி வரும் குளிர்ந்து திருவையாறாகும்.

கு-ரை: சமைவார் - பொருந்தியவர். அமையார் உடல் சோர்தர - மூங்கிலினது உடல் வெடிக்க. அமையா - பொருந்தி.

6. பொ-ரை: தலையோட்டினால் தொகுக்கப்பட்டுள்ள மாலையை அணிந்து மானைக் கையின்கண் கொண்டவராகிய சிவபிரானது இடம், இறைவன் திருவடிக்கண் நிலைத்த மனமுடையவராகிய அடியவர் நாள்தோறும் மலர்கொண்டு தூவி வழிபாடு செய்யும் திருவையாறாகும்.

கு-ரை: கலை - மான். நிலைகொண்ட மனத்தவர் என்றது. இறைவனது திருவடியின் கண் நிலைத்த மனமுடைய அடியார்களை,

7. பொ-ரை: வரங்கள் பல பெற்ற தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனின் தலைகளில் ஒன்றை அறுத்த சிவபிரானது இடம், மலை