389. வரையொன் றதெடுத்த தவரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே. 8
390. சங்கக் கயனு மறியாமைப
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே. 9
__________________________________________________
யினின்று இழிந்துபெருகி வரும் காவிரி
நதி ஆரவாரித்து வரும் திருவையாறு ஆகும்.
கு-ரை: வரம் ஒன்றிய - வரம் பெற்ற.
மேன்மைபொருந்திய என்றுமாம். சேர்வு - இடம். வரைநின்று
இழிவார்தரு பொன்னி எனப் பிரிக்க. வார்தரு - ஒழுகுகின்ற.
அரவம் - ஒலி, பொன்னி - காவிரி.
8. பொ-ரை: கயிலை மலையைப் பெயர்த்த
இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதறுமாறு
நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம். மணம்
பொருந்திய மலர்களைக் கொண்டு புண்ணிய நதியாகி
காவிரி அலைகளோடு கூடிப் பாய்ந்து வளம் சேர்க்கும்
திருவையாறு ஆகும்.
கு-ரை: விரை - மணம். சிரம் அங்கம்
- தலையும் பிற அங்கங்களும்.
9. பொ-ரை: சங்கத்தைக் கையின்கண்
கொண்ட திருமாலும் அறியாதவாறு பொங்கி எழும்
சுடராகத் தோன்றிய சிவபிரான் உறையும் கோயில்,
காவிரி, மகரந்தம், தேன் ஆகியன பொலியும் நீரைக்
கொண்டு வந்து, அழல் வடிவான இறைவன் திருமுன் அர்க்கியமாகக்
காட்டும் திருவையாறாகும்.
கு-ரை: சங்கக்கயன் - சங்கத்தைக்
கையிலேயுடைய திருமால், கொங்கு - தேன்.
அங்கிக்கு எதிர்காட்டும் - காலையில்
அக்கினி காரியம் செய்வோர் அர்க்கியம் சமர்ப்பிக்கும்.
|