திருக்குற்றாலப் புராணம்
மதுரேசர் திருநாட்டு வந்தசமண்
கழுவேற மாறாச் சைவம்
சதுரேற மனுநீதி தழைத்தேறத்
திருவேடு தமிழ்சேர் வைகை
யெதிரேறத் தொண்டர்குழா மீடேறப்
பரசமய இருள்விட் டோடக்
கதிரேறு மணிச்சிவிகை யேறினான்
சரணமந்தக் கரணம் சேர்ப்பாம்.
-திரிகூடராசப்பக்கவிராயர்.
மருதவனப் புராணம்
சிவஞானக் கடலருந்திக் கருமைகொடு
திசைகளெங்குந் தெரியமின்னித்
தவரினஞ்சூழ்ந் திடவுலக முணரவிடித்
தமண்கோடை தணப்ப வோங்கு
புவனமதிற் சைவநெடும் பயிர்தழைப்பப்
பரங்கருணைப் பொருப்பின்மீது
கவிமழைகள் சொரிபுறவக் கவுணியக்கொண்
டலைநாளுங் கருத்துள் வைப்பாம்.
-சிவக்கொழுந்து
தேசிகர்.
|