பக்கம் எண் :

 38. திருமயிலாடுதுறை543


பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே. 9

402. அழிவல் லமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே. 10

403. பாரார் விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

திருமுன் தலை தாழ்த்தி வணங்குங்கள்; எளிதில் நல்வரம் பெறலாம். பிரமனும் திருமாலும் அறியாத அப்பரமன் உறையும் ஊர் திருப்பனையூராகும்.

கு-ரை: இது வரம் வேண்டியவர்கள் பனையூரைச் சிரந்தாழ வணங்குங்கள் என்கின்றது. முன்னி - எண்ணி. வணங்கும் - வணங்குங்கள்; செய்யுமென் முற்று.

10. பொ-ரை: அழிதலில் வல்ல அமணர்களும் பௌத்தர்களும் வாய்த்திறனால் புறங்கூறிய போதும் குறைவுறாத செம்மையாளனாகிய சிவபெருமானது ஊர் பழியற்றவர் சேரும் திருப்பனையூராகும்.

கு-ரை: இது புறச்சமயிகள் பொருந்தாதன சொல்லியபோதும் அவற்றால் இழிவுபடாத இறைவனூர் பனையூர் என்கின்றது. அழிவல் அமணர் - அழிதலில்வல்ல சமணர்கள். தேரர் - புத்தர். மொழி வல்லன - வாய் வன்மையாற் சொல்லும் மொழிகளை. இழிவு - குறைபாடு.

11. பொ-ரை: மண்ணுலகிற் பொருந்தி வாழ்தற்கு ஏற்ற விடை ஊர்தியைக் கொண்ட சிவபெருமானது திருப்பனையூரின் மேல் புகழால் மிக்க தமிழ் ஞானசம்பந்தன் மென்மேலும் விருப்பத்தைத்