399. அடையா தவர்மூ வெயில்சீறும்
விடையான் விறலார் கரியின்றோல்
உடையா னவனெண் பலபூதப்
படையா னவனூர் பனையூரே. 7
400. இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே. 8
401. வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
__________________________________________________
7. பொ-ரை: தன்னை வணங்காத
பகைவர்களான அசுரர்களின் மூன்று அரண்களையும் அழித்த
விடையூர்தியனும், வலிய யானையை உரித்து அதன் தோலை
மேல் ஆடையாகக் கொண்டவனும் எண்ணற்ற பல பூதப்
படைகளை உடையவனுமான சிவபெருமானது ஊர் திருப்பனையூராகும்.
கு-ரை: இது வீரன் மேவும் ஊர் பனையூர்
என்கின்றது. அடையாதவர் - பகைவராகிய திரிபுராதிகள்
சீறும் என்ற பெயரெச்சம் விடை உடையானை விசேடித்தது.
விறல் - வலிமை.
8. பொ-ரை: விளங்கும் முடி பத்தை
உடைய இராவணனை அடர்த்து அவன்படும் அல்லல் கண்டு
அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின்கண் உயிர்கட்கு
நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்தளித்தவனும்
ஆகிய சிவபெருமானது ஊர் திருப்பனையூர்.
கு-ரை: ஐம்பூதங்களையும் ஆக்கிய
இறைவனூர் பனையூர் என்கின்றது. அலல் - துன்பம்; அல்லல்
என்பதன் திரிபு. மற்றும் பல என்றமையான் நுண்பூதங்களும்,
தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையுங் கண்டவன்.
9. பொ-ரை: சிவபெருமானிடம்
வரங்களைப்பெறுதலை எண்ணி மகிழ்வோடு புறப்பட்டு
வரும் அடியவர்களே, அப்பெருமான்
|