பக்கம் எண் :

 39. திருவேட்களம்549


412. ஞாலத் தைநுகர்ந் தவன்றானும்
கோலத் தயனும் மறியாத
சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே. 9

413. நின்றுண் சமணுந் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே. 10

414. நயர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்

__________________________________________________

கு-ரை; இது பிரம கபாலத்தைத்தாங்கி இரந்த பரமேட்டியின் இடம் என்கின்றது. பரம்கொள் பரமேட்டி - மேன்மையைக் கொண்ட சிவன். வரையால் அரங்க - கைலையால் நசுங்க.

9. பொ-ரை: உலகை விழுங்கித் தன் வயிற்றகத்தே வைத்தி திருமாலும், அழகிய நான்முகனும் அறியாத தூயவனாகிய சிவபெருமானது ஊர், அடியவர் ஒருங்கு கூடி வழிபட்டுத் தம் அறியாமை நீங்கப் பெறும் சிறப்புடைய திருமயிலாடுதுறை ஆகும்.

கு-ரை: இது அயனும் மாலும் அறியாதவனூர் என்கின்றது. ஞாலத்தை நுகர்ந்தவன் - பூமியைவிழுங்கித் தன் வயிற்றகத்து அடக்கிய மாயன். சீலம் - எளிமை. மால் - மயக்கம்.

10. பொ-ரை: நின்றுண்பவர்களாகிய சமணர்களும் நெடிதுயர்ந்த புத்தர்களும் ஒரு சிறிதும் தன்னை அறியவாதவர்களாய் ஒழியத்தான் உயர்ந்த வெற்றி அருள் இவைகளைக் கொண்டுள்ள சிவபெருமானது ஊர் நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை ஆகும்.

கு-ரை: புறச்சமயத்தார்க்கு அறியொண்ணாதபடி உயர்ந்ததோனிடம் இது என்கின்றது. வென்றி அருளான் - வெற்றியை விளைவிக்கும் அருளையுடையவன். மன்றல் - நறுமணம்.

11. பொ-ரை: ஞானத்தினால் மேம்பட்டவர் வாழும் சீகாழிப் பதியுள் வாழும் ஞானசம்பந்தன், தன்னை வழிபடுவாரின் மயக்கத்தைத் தீர்த்தருளும் மயிலாடுதுறை இறைவனைப் பற்றித் திருவருள்