449. மூவரு மாகி யிருவரு மாகி
முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப்
பல்கண நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு
தண்மதிண் மூன்றுமெ ரித்த
தேவர்கள் தேவ ரெம்பெரு மானார்
தீதில்பெ ருந்துறை யாரே. 2
__________________________________________________
என்பார் இரங்கிய முகத்துடன் தாழ்ந்து
சொல்ல வேண்டியிருக்க, இவர் இறுமாந்து
சொல்கின்றார் என்றது, ஏலாமல் ஏற்கின்ற இறைமை
தோன்ற. கடமை தவறாதவர்க்குச் செல்வத்துட் செல்வமாய்
இருக்கின்றார் என்பார், தொழில் பேணியோர்க்குச்
செல்வர் என்றார். தமது அருள் வழங்குந் தொழிலைப்
பேணியோர் எனலுமாம். அ மான் நோக்கி - அழகிய
மான் போன்ற கண்ணையுடையவள். அந்தளிர் மேனி -
அழகிய தளிர் போன்ற மேனியை யுடையவள்.
2. பொ-ரை: குற்றமற்ற பேணு பெருந்துறையில்
விளங்கும் எம் பெருமானார், அரி அயன் அரன் ஆகிய முத்தொழில்
செய்யும் மூவருமாய், ஒடுங்கிய உலகை மீளத் தோற்றும்
சிவன், சக்தி ஆகிய இருவருமாய், அனைவர்க்கும்
தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள்
தீர நல்வினைகளை அளித்துப் பதினெண் கணங்களும் நின்று
பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு, மும்மதில்களையும்
எரித்தழித்த தேவதேவராவார்.
கு-ரை: மூவருமாய் இருவருமாய் முதல்வனுமாய்
நின்று, பணிவார்கள் பாவங்கள் தீர நல்வினைகளை
நல்கி நிற்கும் தேவதேவர் இவர் என்கின்றது.
மூவருமாகி - அயன், மால், உருத்திரன் என முத்தொழிலைச்
செய்யும் மூவரையும் அதிட்டித்து நின்று அவரவர் தொழிலைத்
திறம்பட ஆற்றச்செய்தும், இருவருமாகி - தன்னிடத்து
ஒடுங்கிய உலகமாதியவற்றைப் புனருற்பவம் செய்யுங்காலைச்
சிவம் சத்தியென்னும் இருவரும் ஆகி. முதல்வனும் ஆகி
- இவர்களின் வேறாய்நின்று இயக்கும் பரசிவமுமாகி,
வினையோய்ந்து ஆன்மாக்கள் பெத்தநிலையில் நில்லா
ஆகையால் தீவினைகள் நீங்கிநிற்கப் பரங்கருணைத்
தடங்கடலாகிய பரமன் நல்வினைகளை அவைகள் ஆற்ற
அருள்கின்றார் என்பது. சாவம் - வில், வரை -
மேருமலை.
|