பக்கம் எண் :

 42. திருப்பேணுபெருந்துறை577


450. செய்பூங் கொன்றை கூவிள மாலை

சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்

கொய்பூங் கோதை மாதுமை பாகங்

கூடியோர் பீடுடை வேடர்

கைபோ னான்ற கனிகுலை வாழை

காய்குலை யிற்கமு கீனப்

பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்

பில்குபெ ருந்துறை யாரே. 3

451. நிலனொடு வானும் நீரொடு தீயும்

வாயுவு மாகியோ ரைந்து

புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த

புண்ணியர் வெண்பொடிப் பூசி

_________________________________________________

3. பொ-ரை: யானையின் கை போன்ற நீண்ட வாழைக் குலையில் பழுத்த பழங்களிலும், காய்த்த குலைகளிலும், கமுக மரங்களின் பூம்பாளைகளில் ஒழுகும் தேன் பாய்ந்து பெருகும் பெருந்துறை இறைவர், கொன்றைப்பூமாலை, கூவிளமாலை அணிந்த தலையில் கங்கையை ஏற்று, பூமாலை சூடிய உமையைத் தம் உடலின் ஒரு பாகமாகக் கொண்டு அதனால் ஒப்பற்ற அம்மையப்பர் என்ற பெருமையுடைய உருவினராவர்.

கு-ரை: உமையொருபாகம் வைத்த வேடர் இவர் என்கிறது. செய்மாலை எனக்கூட்டிப் புனையப்பெற்ற மாலை என்க. சென்னி - தலை. கொய் பூங்கோதை - கொய்யப்பட்ட பூவால் இயன்ற மாலை. பீடு உடை வேடர் . பெருமைபெற்ற வேடத்தையுடையவர். கை - யானையின் துதிக்கை. வாழைக்குலைக்கு யானையின் கையை ஒப்பிடுதல் மரபு. தேறல் - தேன். வாழைக்குலையில் கமுகு ஈன என்றது இரண்டும் ஒத்த அளவில் வளர்ந்திருக்கின்றன என்று உணர்த்தியவாறு.

4. பொ-ரை: நிலம், வானம், நீர், தீ, காற்று ஆகிய ஐம்பூதங்களின் வடிவாய், ஐந்து புலங்களை வென்றவராய், பொய்ம்மைகள் இல்லாத புண்ணியராய் வாழும் இறைவர், திருவெண்ணீறு அணிந்து நன்மையும் தின்மையும் சிவனாலன்றி வருவதில்லை என்ற நல்லுள்ளங் கொள்பவராய், மல மாசுக்கள் தீர்ந்தவராய் வாழும் அடியவர்கள் நிறைந்த பேணு பெருந்துறையார் ஆவர்.