பக்கம் எண் :

602திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


அஞ்சனமா கரியுரித்தார் அருளாம் என்றே

அருளும் வகை திருக்கடைக்காப் பமையச் சாத்திப்,

பஞ்சுரமாம் பழையதிறங் கிழமை கொள்ளப் பாடினார்

பாரெல்லாம் உய்ய வந்தார்."

என்பது இத்திருப்பதிகம் எழுந்த வரலாற்றைக் குறிக்கும் சேக்கிழார் திருமொழியாகும்.

பண் : தக்கராகம்

பதிக எண் : 45

திருச்சிற்றம்பலம்

481. துஞ்சவருவாருந் தொழுவிப்பாரும்

வழுவிப்போய்

நெஞ்சம்புகுந்தென்னை நினைவிப்பாரு

முனைநட்பாய்

வஞ்சப்படுத்தொருத்தி வாணாள்கொள்ளும்

வகைகேட்

டஞ்சும்பழையனூ ராலங்காட்டெம்

அடிகளே. 1

__________________________________________________

1. பொ-ரை: உறங்கும்போது கனவிடை வருபவரும், தம்மைத் தொழுமாறு செய்பவரும், முனைப்புக் காலத்து மறைந்து, அன்பு செய்யும் காலத்து என் நெஞ்சம் புகுந்து நின்று, நினையுமாறு செய்பவரும் ஆகிய இறைவர், முற்பிறவியில் நட்பாய் இருப்பதுபோலக் காட்டித் தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுப்பிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகளாவார்.

கு-ரை: அடியேனை எல்லாம் செய்விப்பவர் இவர் என்கின்றது. துஞ்சவருவார் - யான் தூங்க என்கனவில் எழுந்தருளுவார். இவன் இறைவன் என்று உணரச் செய்த இறைவனே தொழச் செய்தாலன்றித் தொழும் உரிமையும் ஆன்மாக்களுக்கு இல்லை யாதலின் தொழுவிப்பாரும் என்றார்.

வழுவிப்போய் - உயிர்களுடைய முனைப்புக்காலத்து