491. போழம்பலபேசிப் போதுசாற்றித்
திரிவாரும்
வேழம்வருமளவும் வெயிலேதுற்றித்
திரிவாரும்
கேழல்வினைபோகக் கேட்பிப்பாருங்
கேடிலா
ஆழ்வர்பழையனூ ராலங்காட்டெம்
அடிகளே. 11
492. சாந்தங்கமழ்மறுகிற் சண்பைஞான
சம்பந்தன்
ஆந்தண்பழையனூ ராலங்காட்டெம்
மடிகளை
__________________________________________________
மகனுமான முறையன்பு. இகலும் - மாறுபட்ட.
புகலும் - விதிநூல்களாய ஆகமங்களிற் சொல்லப்பெற்ற.
உண்ணும்வரை நோய்தடுக்கும் உலகமருந்துகள் போலாது
என்றைக்கும் பாவம் அணுகாதவண்ணம் பாதுகாக்கும்
அடிகள் என்பதை விளக்குதல் காண்க.
11. பொ-ரை: மாறுபட்ட சொற்களைப்
பேசியும், காலத்துக்கு ஏற்றவாறு உண்மையல்லாதவைகளைச்
சொல்லியும் திரியும் புறச்சமயத்தவரும், நன்மையல்லாதவற்றை
உபதேசங்களாகக் கூறுபவரும், யானைத் தீ வரும் அளவும்
வெயிலிடை உண்டு திரியும் மதவாதிகளுமாகிய புறச்சமயிகளைச்
சாராது தம்மைச் சார்ந்த அடியவர்களைப் பற்றிய
வினைகள் அகலுமாறு அவர்கட்கு உபதேசங்களைப் புரியச்
செய்பவராகிய அழிவற்ற ஆளுமையுடையவர் ஆலங்காட்டு
எம் அடிகள் ஆவர்.
கு-ரை: போழம் - மாறுபட்ட சொல்.
போது சாற்றி - காலம் பார்த்துச் சொல்லி. திரிவார்
என்றது புறச்சமயிகளை, வேழம் - யானைத்தீ என்னும் நோய்.
துற்றி - உண்டு. கேழல் வினை - கெழுவுதலையுடைய வினை.
போக - கெட. கேழ்பவர் - நன்மை உடையார், கேழ்பு -
நன்மை, கேழ் அல் - நன்மை அல்லாத.
12. பொ-ரை: சந்தனம் கமழும் திருவீதிகளை
உடைய சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன்
அழகிய தண்ணிய ஆலங்காட்டு வேந்தனாக விளங்கும்
அவ்விறைவன் திருவருளாலே போற்றி
|