பக்கம் எண் :

610திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


489. கவிழமலைதரளக் கடகக்கையா

லெடுத்தான்தோள்

பவழநுனைவிரலாற் பையவூன்றிப்

பரிந்தாரும்

490. பகலுமிரவுஞ்சேர் பண்பினாரும்

நண்போரா

திகலுமிருவர்க்கு மெரியாய்த்தோன்றி

நிமிர்ந்தாரும்

புகலும்வழிபாடு வல்லார்க்கென்றுந்

தீயபோய்

அகலும்பழையனூ ராலங்காட்டெம்

அடிகளே. 10

_________________________________________________

முல்லைக்கொடிகள் முல்லை நிலத்தின்கண் தவழ்ந்து படர நறவக் கொடிகள் மலர்களைப் பூத்து விரிந்து நிற்கும் பழையனுரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

கு-ரை: இராவணனைப் பையநெரித்த பெருமான் இவர் என்கின்றது. மலை - கயிலை மலை. தரளக்கடகம் கை - முத்துக் கடகம் செறிந்தகை. பவழநுனை விரல் - பவழம் போன்ற நுனியையுடைய விரல். பைய - மெதுவாக. பரிந்தார் - கருணைசெய்தவர். புறவம் - முல்லைநிலம். நறவம் - நறவுமலர்.

10. பொ-ரை: பகல் இரவு போன்ற வெண்மை கருமை நிறங்களைக்கொண்ட நான்முகனும் திருமாலும் தங்களிடையே உள்ள உறவு முறையையும் கருதாது யார் தலைவர் என்பதில் மாறுபட்டு நிற்க அவ்விருவர்க்கும் இடையே எரியுருவாய்த் தோன்றி ஓங்கி நின்றவரும் ஆகம நூல்கள் புகலும் வழிபாடுகளில் தலை நிற்கும் அடியவர்க்குத் தீயன போக்கி அருள்புரிபவரும் ஆகிய பெருமான் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

கு-ரை: தந்தையும் மகனும் என்ற முறையையும் பாராதே முனிந்த அயனுக்கும் மாலுக்கும் இடையே எரியாய் நிமிர்ந்த பெருமான் இவர் என்கின்றது. பகலும் இரவும் சேர்பண்பினார். நிறத்தால் வெண்பகலையும், காரிரவையும் ஒத்த பண்பினர். நண்பு - தந்தையும்