பக்கம் எண் :

 45. திருவாலங்காடு609


488. கணையும்வரிசிலையு மெரியுங்கூடிக்

கவர்ந்துண்ண

இணையிலெயின்மூன்று மெரித்திட்டாரெம்

மிறைவனார்

பிணையுஞ்சிறுமறியுங் கலையுமெல்லாங்

கங்குல்சேர்ந்

தணையும்பழையனூ ராலங்காட்டெம்

அடிகளே. 8

489. கவிழமலைதரளக் கடகக்கையா

லெடுத்தான்தோள்

பவழநுனைவிரலாற் பையவூன்றிப்

பரிந்தாரும்

__________________________________________________

வாழ்த்துக்களைக் கேட்டு தெய்வத் தன்மை மிகுந்து தோன்றும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

கு-ரை: உமையொரு கூறனாக, இருவேறுருவின் ஓருபேரியாக் கையனாக எழுந்தருளிய பெருமான் இவர் என்கின்றது. இரு கூறு - சத்தியின்கூறும் சிவத்தின்கூறும் ஆகிய இரண்டு கூறு, வைகல் - நாடோறும். அணங்கும் - தெய்வத்தன்மை மிகும்.

8. பொ-ரை: அம்பு வில் நெருப்பு ஆகியன கூடிக் கவர்ந்து உண்ணுமாறு ஒப்பற்ற முப்புரங்களை எரித்தவராகிய எம் இறைவர். பெண் மான் ஆண்மான் அவற்றின் குட்டிகள் ஆகியன இரவிடைச் சென்றணையும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

கு-ரை: முப்புரங்களை வில்லும் அம்பும் தீயும்கூடி எரிக்கச் செய்த இறைவன் இவர் என்கின்றது. இணை - ஒப்பு - பிணை - பெண்மான். மறி - மான்குட்டி. கலை - ஆண்மான். கங்குல் - இரா.

9. பொ-ரை: கயிலை மலை நிலை குலையுமாறு முத்துக்கள் பதித்த வீரக் கடகம் அணிந்த தன் கைகளால் எடுத்த இராவணனின் தோள் வலியைத் தம் பவழம் போன்ற கால்விரல் நுனியால் மெல்ல ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு இரங்கி அருள் புரிந்த சிவபுரானார்.