486. பறையுஞ்சிறுகுழலும் யாழும்பூதம்
பயிற்றவே
மறையும்பலபாடி மயானத்துறையும்
மைந்தனார்
பிறையும்பெரும்புனல்சேர் சடையினாரும்
பேடைவண்
டறையும்பழையனூ ராலங்காட்டெம்
அடிகளே. 6
487. நுணங்குமறைபாடி யாடிவேடம்
பயின்றாரும்
இணங்குமலைமகளோ டிருகூறொன்றா
யிசைந்தாரும்
வணங்குஞ்சிறுத்தொண்டர் வைகலேத்தும்
வாழ்த்துங்கேட்
டணங்கும்பழையனூ ராலங்காட்டெம்
அடிகளே. 7
__________________________________________________
6. பொ-ரை: பறை, சிறுகுழல், யாழ் முதலிய
கருவிகளைப் பூதங்கள் ஒலிக்க வேதங்களைப் பாடிக்
கொண்டு மயானத்தில் உறையும் மைந்தராய், பிறை,
பெருகி வரும் கங்கை ஆகியவற்றை அணிந்த சடை முடியினர்
ஆகிய சிவபெருமான் பெடைகளோடு கூடிய ஆண் வண்டுகள்
ஒலிக்கும்சோலைகள் சூழ்ந்த பழையனூரைச் சேர்ந்த
திருவாலங்காட்டும் எம் அடிகள் ஆவார்.
கு-ரை: பறை குழல் யாழ் முதலியவற்றைப்
பூதகணம் வாசிக்க, திருவாலங்காட்டுறையும் பெருமானிவர்
என்கின்றது. பயிற்ற - தம்முடனுறை பூதங்கள் பலகாற்பழக்க.
பேடைவண்டு - பெண் - வண்டு. அறையும் - ஒலிக்கும்.
7. பொ-ரை: நுட்பமான ஒலிக் கூறுகளை
உடைய வேதங்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும்
பல்வேறு திருவுருவங்களைக் கொள்பவரும், தம்மோடு
இணைந்த பார்வதி தேவியுடன் இருவேறு உருவுடைய
ஓருருவாக இசைந்தவரும், ஆகிய பெருமானார் தம்மை வணங்கும்
அடக்கமுடைய தொண்டர்கள் நாள்தோறும் பாடும்
|