பக்கம் எண் :

 45. திருவாலங்காடு607


485. ஈர்க்கும்புனல்சூடி யிளவெண்திங்கள்

முதிரவே

பார்க்குமரவம்பூண் டாடிவேடம்

பயின்றாரும்

கார்க்கொள்கொடிமுல்லை குருந்தமேறிக்

கருந்தேன்மொய்த்

தார்க்கும்பழையனூ ராலங்காட்டெம்

அடிகளே. 5

__________________________________________________

பெண் மயில்களோடு கூடிக் களித்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

கு-ரை: கால காலனாய கருத்தா இவர் என்கின்றது. பாலமதி - இளம்பிறை. பழியாரோ - தனக்கு வரும் பழியை ஆராயாத, பழியாவது சிவனடியாரைப் பிடிக்க முயன்ற தீங்கு. காலன் பிறவற்றின் உயிர்களைப் பறிப்பதும் இறைவன் அருளாணைவழி நின்றே என்பது விளங்கக் காலகாலனாய கருத்தனார் என்றார்.

கோலம் - அழகு. ஆலும் - ஆரவாரிக்கும். இது மயில் ஒலியைக் குறிக்கும் மரபுச் சொல்.

5. பொ-ரை: ஈர்த்துச் செல்லுதலில் வலிய கங்கை நீரை முடிமிசைத் தாங்கி, இளம்பிறையை விழுங்க அதனது வளர்ச்சி பார்த்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு, நடனம் ஆடிப் பல்வேறு வேடங்களில் தோன்றி அருள்புரிபவர், கார்காலத்தே மலரும் முல்லைக் கொடிகள் குருந்த மரங்களில் ஏறிப் படர அம்மலர்களில் உள்ள தேனை உண்ணவரும் கரிய வண்டுகள் மலரை மொய்த்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

கு-ரை: இளவெண் திங்கள் முதிரும்வரை பார்த்திருக்கும் அரவம் பூண்டாடிய பெருமான் இவர் என்கின்றது.

ஈர்க்கும் - இழுத்துச் செல்லும். திருமுடிக்கண் உள்ள அரவம் உடனிருக்கும் இளம்பிறையை முதிரட்டும்; உண்போம் என்று பார்த்திருக்கின்றது என்பதை விளக்கிய வாறு. கார்க்கொள் - கார் காலத்தைக் கொண்ட. கருந்தேன் - கரிய வண்டு.