46. திருவதிகைவீரட்டானம்
பதிக வரலாறு :
திருவக்கரை முதலிய பதிகளை வணங்கிய
பிள்ளையார், அடியார் கூட்டத்துடன் திருவதிக்கை
எழுந்தருளுகின்ற காலத்து, சிவபெருமான் தம்திருநடனத்தைப்
புலப்படும்படிக் காட்டியருள ‘குண்டைக் குறட்பூதம்‘
என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.
பண் : தக்கராகம்
பதிக எண்: 46
திருச்சிற்றம்பலம்
493. குண்டைக் குறட்பூதங் குழும வனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன்
விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.
1
494. அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோ டுடன்கை யனல்வீசிச்
__________________________________________________
1. பொ-ரை: பருத்த குள்ளமான பூத கணங்கள்
தன்னைச் சூழ்ந்து நிற்கக் கையில் அனலை ஏந்தியவனாய்,
வண்டுகள் மருளிந்தளப் பண்பாட, பொன் போன்று
விரிந்து மலர்ந்து கொன்றை மலர் மாலை அணிந்தவனாய்ச்
சிவபிரான் கெண்டை மீன்கள் பிறழ்ந்து
விளையாடும் தெளிந்த நீரை உடைய கெடில நதியின்
வடகரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்து ஆடுவான்.
கு-ரை: கெடில நதியின் வடபக்கத்து,
கொன்றைமாலையணிந்த பெருமான் அனல் ஏந்தி வீரட்டானத்து
ஆடும் என்கின்றது. குண்டை - பருத்த. குறள் - குள்ளமான.
குழும - கூடியிருக்க. மருள் பாட - மருளித்தளம் என்னும்
பண்ணைப் பாட. இது குறிஞ்சிப்பண்திறம் எட்டனுள்
ஒன்று. பொன்விரிகொன்றை - பொன்னிறமாக விரிந்த
கொன்றை. தொடையலான் - மாலையை அணிந்த இறைவன்.
தொடை மாலன் ஏந்தி வீரட்டானத்து ஆடும் எனப்
பொருத்துக.
2. பொ-ரை: சிவபிரான் தாமரை
அரும்பு, குரும்பை ஆகியவற்றை அழகால் வென்றை மென்மையான
தனங்களையும், கரும்பு
|