பக்கம் எண் :

614திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பு மதிகையு ளாடும்வரரட் டானத்தே. 2

495. ஆடலழனாக மரைக்கிட் டசைத்தாடப்
பாடன் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான்
மாட முகட்டின்மேன் மதிதோ யதிகையுள்
வேடம் பலவல்லா னாடும்வரரட் டானத்தே. 3

_______________________________________________

போன்ற இனிய மொழிகளையும் உடைய உமையம்மையோடு கூடிக் கையில் அனல் ஏந்தி வீசிக் கொண்டு, வண்டுகள் தேனுண்ணும் இதழ் விந்த கொன்றை மாலை அணிந்த ஒளிமயமான பொன் போன்ற சடைகள் தாழத் தன்னால் பெரிதும் விரும்பப்படும் அதிகை வீரட்டானத்து ஆடுவான்.

கு-ரை: இறைவர் உமையம்மையாரோடு திருவதிகை வீரட்டானத்து ஆடுவர் என்கின்றது.

அரும்பு - தாமரையரும்பு. அலைத்த - அழகின்மிகுதியால் வருத்திய. சுரும்பு - ஒருசாதி வண்டு. அதிகை - தலப்பெயர். வீரட்டானம் - கோயிற்பெயர்.

3. பொ-ரை: வென்றியையும் அழல் போலும் கொடிய தன்மையையும் கொண்ட நாகத்தை இடையில் பொருந்தக் கட்டி ஆடுமாறு செய்து, பாடப்படும் வேதங்களில் வல்லவனாய், ‘படுதம்‘ என்னும் கூத்தினை ஆடிக்கொண்டு, பலி தேடித் திரிபவனாய சிவபிரான் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்த மாடவீடுகளை உடைய திருவதிகையிலுள்ள வீரட்டானத்தில் பல்வேறு கோலங்களைக் கொள்ளுதலில் வல்லவனாய் ஆடுவான்.

கு-ரை : நாகம் முதலியவற்றைக் கட்டி, வேடம் பலவல்ல இறைவர் வரரட்டானத்து ஆடுவர் என்கின்றது. ஆடல் அழல் நாகம் - வெற்றியோடுகூடிய கொடியபாம்பு.

இட்டு - அணியாக இட்டு. படுதம் பலி பெயர்வான். ‘படுதம்‘ என்னும் கூத்தினை ஆடிக்கொண்டு பலிக்காகத் திரிபவன். வேடம் பலவல்லான் என்றது நினைந்த வடிவை நினைந்த வண்ணம் அடையும் வல்லமை உடையனாதலின்.