496. எண்ணா ரெயிலெய்தா னிறைவ னனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரம னதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே.
4
497. கரிபுன் புறமாய கழிந்தா ரிடுகாட்டில்
திருநின் றொருகையாற் றிருவா மதிகையுள்
எரியேந் தியபெருமா னெரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே.
5
498. துளங்குஞ் சுடரங்கைத் துதைய
விளையாடி
இளங்கொம் பனசாய லுமையோ டிசைபாடி
_______________________________________________
4. பொ-ரை: பகைவரது திரிபுரங்களை
எய்து அழித்த இறைவன் அனலைக் கையில் ஏந்தி
மார்ச்சனை இடப்பட்ட முழவு முழங்க இளம் பிறையை
முடியில் சூடிப் பண்ணமைப்புடைய வேதங்களை அந்தணர்
ஓதத்திருவதிகை வீரட்டானத்தே தேவர்கள் போற்ற
நின்று ஆடுவான்.
கு-ரை: பகைவரது திரிபுரத்தை எரித்தருளிய
இறைவர் அனலேந்தி, மதிசூடி, மறைபாட அதிகை வீரட்டானத்து
ஆடுவர் என்கின்றது. எண்ணார் - பகைவர். மண் -
மார்ச்சனை. முதிரா மதி - இளம் பிறை.
5. பொ-ரை: கரிந்த புல்லிய ஊர்ப்புறமாய
இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில், ஒரு திருக்கரத்தில்
எரி ஏந்தி ஆடும் பெருமான் திருமகள் நிலைபெற்ற திருவதிகையில்
உள்ள வீரட்டானத்தில் எரி போன்று சிவந்த தன்
சடைகள் தாழ்ந்து விரிய தலையில் கங்கை சூடி ஆடுவான்.
கு-ரை: எரியேந்திய பெருமான் சடைதாழப்
புனல்சூடி இடுகாட்டில் ஆடுவார் என்கின்றது. கரி
புன்புறம் ஆய - கரிந்த புல்லிய ஊர்ப்புறமாகிய. திரு
நின்று - திருமகள் நிலைபெற்று, ஒருகையால் - ஒழிதலால்:
அஃதாவது பிற இடங்கட்குச் செல்லுதலை ஒழிதலால். இது
திருஅதிகை என்பதற்குப் பொருள் காட்டியவாறு.
6. பொ-ரை: அசைந்து எரியும்
அனலை அழகிய கையில் பொருந்த ஏந்தி விளையாடி,
இளங்கொம்பு போன்ற உமையம்மை
|