பக்கம் எண் :

616திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே. 6

499. பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக்
கீத முமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே. 7

500. கல்லார் வரையரக்கன் றடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லா லெயிலெய்தா னாடும்வீரட் டானத்தே. 8

_______________________________________________

யோடு இசை பாடி, வளமை உள்ள புனல் சூழ்ந்த வயல்களை உடைய திருவதிகையில் வீரட்டானத்தே முடிமிசை விளங்கும் பிறைசூடி ஆடுவான்.

கு-ரை: உமையோடு இசைபாடி ஆடுவார் என்கின்றது. துளங்கும் - அசைந்து (எரிகின்ற). துதைய - நெருங்க. சாயல் - மென்மை.

7. பொ-ரை: பரம்பொருளாகிய பரமன் தன் திருவடிகளைப் பலரும் பரவி ஏத்தி வணங்கவும், பூத கணங்கள் புடை சூழவும், புலித்தோலை உடுத்து, உமையம்மை கீதம் பாடக் கெடில நதியின் வடகரையில் வேதமுதல்வனாய் வீரட்டானத்தே ஆடுவான்.

கு-ரை: இது உமையவளே இசைபாட வேதமுதல்வன் ஆடுகிறான் என்கின்றது. பலர் என்றது பாதத்தைத் திருவருளாகவே எண்ணிப்பணியும் சிவஞானியரும், உறுப்பென எண்ணிப்போற்றும் உலக ஞானியரும் ஆகிய பலரையும்.

8. பொ-ரை: கற்கள் பொருந்திய கயிலை மலையை எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து, அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய இறைவன் பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடித்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.