பக்கம் எண் :

 47. திருச்சிரபுரம்617


501. நெடியா னான்முகனு நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
கடியார் கழுநீலம் மலரும் மதிகையுள்
வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே. 9

502. அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடனேந்தி யுடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வாதுமையோடுடனாகி
விரைதோ யலர்தாரா னாடும்வீரட் டானத்தே. 10

_______________________________________________

கு-ரை: இராவணனது தோளழகுகெட அடர்த்து அவனுக்கு அருள்செய்தவர் அதிகையுள் ஆடுகிறார் என்கின்றது. கல்லால் வரை என்றது கயிலையை. கயிலை கல்லில்லாததாயினும் மலையென்ற பொதுமைபற்றிக் கூறியது. கவின் - அழகு. ஒல்லை - விரைவாக: காலந் தாழ்க்க அடர்ப்பின் அவனிறந்தேபடுவான் என்னுங் கருணையால். பல் ஆர் பகுவாய - பற்கள் பொருந்திய பிளவுபட்ட வாயையுடைய.

9. பொ-ரை: பேருருக் கொண்ட திருமாலும், நான்முகனும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்தவனை, திருநீறணிந்த மார்பினனை, முப்புரி நூல் அணிந்தவனைக் காண்கிலார்: அப்பெருமான் மணம் கமழும் நீலப்பூக்கள் மலரும் திருவதிகையிலுள்ள வீரட்டானத்தே முடைநாற்றமுடைய தலை ஓட்டைக் கையில் ஏந்தி ஆடுகின்றான்.

கு-ரை: அயனும் மாலும் அறியமுடியாதவர் என்கின்றது. கடி - மணம். கழுநீலம் - நீலப்பூ. வெடி - முடைநாற்றம். நெடியானும் நான்முகனும் நிமிர்ந்தானை, மார்பானை, உடையானை, காண்கிலார்: அவன் அதிகையுள் வீரட்டானத்து ஆடும் என முடிக்க.

10. பொ-ரை: அரச மரத்தையும் தழைத்த அசோக மரத்தையும் புனித மரங்களாகக் கொண்டு குண்டிகையாகச் சுரைக்குடுக்கையை ஏந்தித் திரியும் புத்தர்கள், ஆடையற்றுத் திரியும் சமணர்கள் ஆகியவர்களின் பொருந்தாத வார்த்தைகளைக் கேளாதரர். மணம் கமழும் மாலை அணிந்த சிவபிரான் உமையம்மையோடு உடனாய் அதிகை வீரட்டானத்தே ஆடுவான். அவனை வணங்குங்கள்.

கு-ரை: அரை - அரச மரம். புத்தர் சமணர் உரைகள் ஒன்றோடு