503. ஞாழல் கமழ்காழி யுண்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீ ரதிகைவீரட் டானத்துச்
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழுந் துணையாக நினைவார் வினையிலரே.
11
திருச்சிற்றம்பலம்
_______________________________________________
ஒன்று ஒவ்வா என்கின்றது. சுரைக்குடுக்கையை
ஏந்தித் திரிபவர் ஆதலின் இங்ஙனம் கூறினார்.
விரை - மணம்.
11. பொ-ரை: ஞாழற் செடிகளின் மலர்கள்
மணம் கமழும் சீகாழியுள் தோன்றிய ஞானசம்பந்தன்,
நாணல்களால் கரைகள் அரிக்கப் படாமல் காக்கப்படும்
தெளிந்த நீர்வளம் உடைய திருவதிகை வீரட்டானத்தில்,
ஆடும் கழல் அணிந்த அடிகளை உடைய சிவபிரானைப்
போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை, வாழ்வுத் துணையாக
நினைபவர் வினையிலராவர்.
கு-ரை: இப்பதிகத்தைத் தமது
வாழ்விற்குத் துணையாகக் கொண்டவர்கட்கு வினையில்லை
என்கின்றது. ஞாழல் - புலிநகக் கொன்றை. வேழம் -
கொறுக்காந் தட்டை. கரை - கரையாமலிருக்க நாணல்
இடுவது மரபு.
திருத்தொண்டர் புராணம்
திருஞானசம்பந்தர்
புராணம்
ஆதி தேவர்அங் கமர்ந்தவீ ரட்டானஞ்
சென்றணை பவர்முன்னே
பூதம் பாடநின்
றாடுவார் திருநடம்
புலப்படும் படிகாட்ட
வேத பாலகர் பணிந்துமெய் யுணர்வுடன்
உருகிய விருப்போடும்
கோதி லாஇசை குலவுகுண் டைக்குறட்
பூதம்என் றெடுத்தேத்தி.
- சேக்கிழார். |
|