47. திருச்சிரபுரம்
பண் : பழந்தக்கராகம்
பதிக எண்: 47
திருச்சிற்றம்பலம்
504. பல்லடைந்த வெண்டலையிற்
பலிகொள்வ தன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாண்
மேனியில் வைத்தலென்னே
சொல்லடைந்த தொன்மறையோ
டங்கங் கலைகளெல்லாஞ்
செல்லடைந்த செல்வர்வாழுஞ்
சிரபுர மேயவனே. 1
505. கொல்லைமுல்லை நகையினாளோர்
கூறதுவன் றியும்போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணு
மாதரவென் னைகொலாஞ்
1. பொ-ரை: பொருள் பொதிந்த
சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்களையும், அவற்றின்
அங்கங்களையும், பிற கலைகளையும் கற்றுணர்ந்த செல்வர்கள்
வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப் பதியுள் எழுந்தருளிய
இறைவனே! பற்கள் பொருந்திய வெண்மையான தலையில்
பல இடங்களுக்கும் போய்ப் பலியேற்பதோடு வில்
போன்ற புருவத்தை உடைய உமையம்மையை உன் திருமேனியில்
கொண்டுள்ள காரணம் யாதோ?
கு-ரை: வேதம், அங்கம், கலைகள் எல்லாவற்றினும்
செல்லும் கலைச்செல்வர்கள் வாழும் சிரபுரமேயவனே!
வெண்தலையிற் பலி கொள்வதோடன்றி உமையவளை
ஒருபாகத்து வைத்தது என்னே என வினவுகின்றார். வில்
அடைந்த புருவம் - வில்லை ஒத்த புருவம். செல் அடைந்த
செல்வர் - வேத முதலியவற்றில் செல்லுதலைப்பெற்ற
கலைச்செல்வர்கள்.
2. பொ-ரை: சொல்லச் சொல்ல நீண்டு
செல்லும் பெருமையாளரும், பழமையான கலைகளைக் கற்று
வல்லவர்களுமாகிய அறிஞர்கள்
|