சொல்லநீண்ட பெருமையாளர்
தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு
சிரபுர மேயவனே. 2
506. நீரடைந்த சடையின்மேலோர்
நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த வேறதேறி யுண்பலி
கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து
காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு
சிரபுர மேயவனே. 3
வாழ்வதும், வழங்கத் தொலையாத செல்வ
வளத்தை உடையதுமான சிரபுரம், மேவிய இறைவனே!
முல்லை நிலத்தே தோன்றிய முல்லை யரும்பு போன்ற
பற்களை உடைய உமையம்மை ஓர் கூற்றில் விளங்கவும்
சென்று அல்லற்படுவோர் ஏற்கும் பலி உணவை ஏற்று உண்ணுதலில்
விருப்பம் கொள்வது ஏனோ?
கு-ரை: இதுவும் பெண்பாகராகிய தேவரீர்
பலிதேர்வது ஏன் என்கின்றது. கொல்லை - முல்லை நிலம்.
முல்லை நகை - முல்லை யரும்புபோன்ற பல். நகை: தொழிலாகுபெயர்.
ஓர் கூறு - ஒரு பங்கில் உள்ளாள். அல்லல் வாழ்க்கைப்
பலி - துன்ப வாழ்வாகிய பலி. ‘இரத்தலின் இன்னாதது
இல்லை’ என்ற வள்ளுவர் குறளும் நோக்குக.
3. பொ-ரை: வண்டுகள் சீகாமரம்
என்னும் பண்ணைப் பாடி மகிழ்ந்துறைவதும், மேகங்கள்
தவழும் சோலைகளால் சூழப்பெற்றதும், அறநெறியில்
விளைந்த செல்வம் பெருகி விளங்குவதுமாகிய
சிரபுரம் மேவிய இறைவனே! கங்கையை அணிந்த சடைமுடியின்
மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்து, பல ஊர்களையும்
அடைதற்கு ஏதுவாய ஆனேற்றில் ஏறிச் சென்று, பலரிடமும்
பலி கொள்வது ஏனோ?
கு-ரை: மதிசூடிய நீர் பலிகொள்வது
ஏன் என்கின்றது. கார் - மேகம். வண்டு காமரம் இசைப்ப
என மாறுக. அறவழி ஈட்டப்பெற்ற செல்வமாதலின்,
சீர் அடைந்த செல்வம் என்றார்.
|