பக்கம் எண் :

622திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


509. கண்ணுமூன்று முடையதன்றிக்

கையினில் வெண்மழுவும்

பண்ணுமூன்று வீணையோடு

பாம்புடன் வைத்தலென்னே

எண்ணுமூன்று கனலுமோம்பி

யெழுமையும் விழுமியராய்த்

திண்ணமூன்று வேள்வியாளர்

சிரபுர மேயவனே. 6

510. குறைபடாத வேட்கையோடு

கோல்வளை யாளொருபாற்

பொறைபடாத வின்பமோடு

புணர்தரு மெய்ம்மையென்னே

கு-ரை: திரிபுரம் எரித்த தேவரீர் யானையை உரித்தது ஏன் என்கின்றது. பெற்றி - தன்மை. கரம் எடுத்து - கையால் தூக்கி, மரம் உரித்த தோல் - மரவுரி. தேவரும் முனிவரும் கை தலைமேல் கூப்பி வணங்கும் சிரபுரமேயவன் என்க.

6. பொ-ரை: ஆகவனீயம், காருகபத்தியம், தக்ஷிணாக்கினி என்று எண்ணப்படும் முத்தீயையும் வேட்பதுடன் எழு பிறப்பிலும் தூயவராய் உறுதிப்பாட்டுடன் தேவ யாகம், பிதிர் யாகம், இருடி யாகம் ஆகிய மூன்று வேள்விகளையும் புரியும் அந்தணாளர் வாழும் சிரபுரம் மேவிய இறைவனே; முக்கண்களை உடையவனாய்க் கைகளில் வெண் மழு, பண் மூன்றுடைய வீணை, பாம்பு ஆகியன கொண்டுள்ள காரணம் யாதோ?

கு-ரை: மூன்று கண்ணுடைய முதல்வராகிய தேவரீர் மழு, வீணை, பாம்பு, இவற்றை வைத்தது ஏன் என்கின்றது. பண் மூன்று - பண், திறம், திறத் திறம் என்பன. இறைவன் திருக்கரத்தில் வீணையுண்மை ‘எம்மிறை நல்வீணை வாசிக்குமே‘ என்ற பகுதியாலும் அறிக. எண்ணும் - எண்ணப்படுகின்ற. மூன்று கனல் - ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்யம் என்பன. மூன்று வேள்வியாளர் - தேவயஞ்ஞம், பிதிர்யஞ்ஞம், ருஷியஞ்ஞம் என்னும் மூன்று வேள்விகளையும் செய்பவர்கள்.

7. பொ-ரை: சிறிதும் சாயாத மெல்லிய தனங்களை உடைய இளமகளிர் மாளிகைகளின் மேல் இருந்து குற்றமற்ற பாடல்களைப் பாடும்