512. மாலினோடு மலரினானும்
வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட
தத்துவ மேயதென்னே
நாலுவேத மோதலார்கள்
நந்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த
சிரபுர மேயவனே. 9
513. புத்தரோடு சமணர்சொற்கள்
புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த
பான்மைய தென்னைகொலாம்
கு-ரை: இது இறைவனை நின்மலனே! கொள்கையானே!
தோளினானே! மேயவனே! என விளிக்கின்றது. அரக்கன்
- இராவணன், நிலை யெடுத்த - இறைத்தன்மையின் நிலையை
எடுத்துக் காட்டிய; நிலைக்கச் செய்த எனலுமாம். துலையெடுத்த
சொல் பயில்வார் - இருவினையொப்போடு கூடிய தோத்திரிக்கும்
அன்பர்கள். மேதகு வீதி - மேவுதல் தக்கவீதி. அதாவது
அவர்கள் வாழ்கின்ற வீதி. சிலை எடுத்த - வில்லைச்
சுமந்த.
9. பொ-ரை: நான்கு வேதங்களையும்
ஓதும் அந்தணர்கள் நம் துணைவனே என்று போற்றி
இறைஞ்சச் சேல் மீன்கள் மேயும் வயல்கள் சூழ்ந்த
சிரபுரம் மேவிய இறைவனே! தாமே பெரியர் என வந்த திருமாலும்
தாமரை மலரில் உறையும் நான்முகனும் இயலாது மிகவும்
அஞ்சுமாறு செய்து மிக நீண்ட திருவுருவைக் கொண்டது
ஏன்?
கு-ரை: அயனும் மாலுங் காணாதவண்ணம்
நீண்டதன் தத்துவம் என்ன என்கின்றது. சாலும் -
மிகவும். ஓதலார்கள் - ஓதுதலையுடையவர்கள். சேலு மேயும்
கழனி - சேல் மீன்கள் மேயும் வயல். சேலு என்பதில்
உகரம் சாரியை.
10. பொ-ரை: மதம் பொருந்திய யானையின்
தோலைப் போர்த்து உமையம்மையாருடன் சித்தர்கள்
பலரும் பணியச் செல்வச் சிரபுரநகரில் மேவிய
இறைவனே! புத்தர்கள் சமணர்கள் ஆகிய
|