பக்கம் எண் :

 48. திருச்சேய்ஞலூர்625


மத்தயானை யுரியும்போர்த்து

மங்கையொடும்முடனே

சித்தர்வந்து பணியுஞ்செல்வச்

சிரபுர மேயவனே. 10

514. தெங்குநீண்ட சோலைசூழ்ந்த

சிரபுர மேயவனை

அங்கநீண்ட மறைகள்வல்ல

வணிகொள்சம் பந்தனுரை

பங்கநீங்கப் பாடவல்ல

பத்தர்கள் பாரிதன்மேற்

சங்கமோடு நீடிவாழ்வர்

தன்மையி னாலவரே. 11

திருச்சிற்றம்பலம்

புறச்சமயிகளின் வார்த்தைகள் புறனுரை என்று கருதும் பத்தர் வந்து பணியுமாறு செய்த பான்மையாதோ? உரியும் - உம்மை இசைநிறை.

கு-ரை: புத்தர் சமணராகிய புறச்சமயிகள் வார்த்தை புறம்பானது என்றெண்ணும் அன்பர்கள் வணங்க இருப்பதேன்? என்கின்றது. சித்தர் - யோகநெறியில் நின்று சித்தி பெற்றவர்கள்.

11. பொ-ரை: தென்னைகள் நீண்டு வளர்ந்து பயன்தரும் சோலைகள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனை ஆறு அங்கங்களுடன் விரிந்துள்ள வேதங்களை அறிந்துணர்ந்த அழகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிக வாசகங்களைத் தம் குற்றங்கள் நீங்கப் பாடவல்ல பக்தர்கள் இவ்வுலகில் அடியவர் கூட்டங்களோடு வாழும் தன்மையினால் வாழ்நாள் பெருகி வாழ்வர்.

கு-ரை: இப்பதிகத்தைக் குற்றமறப்பாட வல்லார் இவ்வுலகில் சத்சங்கத்தோடு நீடுவாழ்வார் எனப் பயன்கூறுகிறது. அங்கம் நீண்ட மறைகள் - சிக்ஷை முதலிய ஆறு அங்கங்களால் நரண்ட வேதங்கள். பங்கம் - மலமாயாபந்தத்தால் விளைந்த குற்றங்கள். சங்கம் - அடியார் கூட்டம். தன்மையினால் நீடிவாழ்வார் எனக் கொண்டு கூட்டுக.