பக்கம் எண் :

 48. திருச்சேய்ஞலூர்631


522. மாவடைந்த தேரரக்கன் வலி

தொலை வித்தவன்றன்

நாவடைந்த பாடல்கேட்டு

நயந்தருள் செய்ததென்னே

பூவடைந்த நான்முகன்போற்

பூசுரர் போற்றிசெய்யும்

சேவடைந்த வூர்தியானே

சேய்ஞலூர் மேயவனே. 8

523. காரடைந்த வண்ணனோடு

கனகம னையானும்

பாரடைந்தும் விண்பறந்தும்

பாதமு டிகாணார்

இடறிய காலை என்பதாம். வேர் அடைந்து என்பதற்குச் சினத்தால் வேர்த்து எனலுமாம். வேர்த்தடிந்தான் - நிலையை யறுத்தவன். அடைந்த தார் மாலை சூட்டி - தாம் சூட்டியதாரையும் மாலையையும் சூட்டி.

8. பொ-ரை: தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள் போற்றும், விடையை ஊர்தியாகக் கொண்டவனே! திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடைய இராவணனது வலிமையை அழித்து அவன் நாவினால் பாடிய பாடலைக் கேட்டு விரும்பி அவனுக்கு அருள்கள் பல செய்தது ஏனோ?

கு-ரை: இராவணனது வலிதொலைத்து, அவன்பாடல்கேட்டு அருளியதேன் என்கின்றது. இராவணன்தேர் புஷ்பகமாயினும் மா அடைந்ததேர் என்றது தேர் என்ற பொதுமை நோக்கி. மா - குதிரை: வண்டுமாம். பாடல் - சாமகீதம். பூசுரர் - அந்தணர். சே - இடபம்.

9. பொ-ரை: தேர் ஓடும் அழகிய வீதிகளை உடைய திருச்சேய்ஞலூர் மேவிய சிவனே! கருமை நிறம் பொருந்திய திருமால் பொன்வண்ணனாகிய பிரமன் ஆகியோர் உலகங்களை அகழ்ந்தும் பறந்தும் சென்று அடிமுடிகளைக் காணாராய்த் தம் தருக்கொழிந்து பின் அவர்கள் போற்ற அவர்பால் சென்று அருள் செய்தது ஏனோ?