சீகாழிப் புராணம்
குழுவேறச் சமண்மூகர் அழலேற
விடுத்ததனைக் கூடற் கோமான்
வழுவேறு முடலேற வுடன்முரணும்
மனமுரணும் மாற்றி அன்னார்
கழுவேற வெண்ணீறும் ஐந்தெழுத்தும்
விரித்துலகைக் கதியி லேற்றி
மழுவேறும் கரத்தான்றன் அருளேறும்
கவுணியர்கோன் மலர்த்தாள் போற்றி.
- சுப்பையாப்பிள்ளை.
திருஆப்பனூர்ப் புராணம்
பெருமுலைப்பால் அகன்பிரமன்
கண்டறியாப் பெருந்தகைமேல்
பொருமுலைப்பான் மெழுகினுளம்
புரைந்துருகத் தமிழ்பாடும்
அருமுலைப்பால் அரும்பனைய
மணிமுறுவல் மலைமகளார்
திருமலைப்பால் மணங்கமழ்வாய்ச்
செல்வனையாம் பரவுவாம்.
-கந்தசாமிப்புலவர்.
|