578. உறிகொள்கையர் சீவரத்த
ருண்டுழன்மிண் டர்சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே
நித்தலுங்கை தொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப்
பொங்குவிடத் தையுண்ட
முறிகொண்மேனி மங்கைபங்கன்
மேயதுமு துகுன்றே. 10
579. மொய்த்துவானோர் பல்கணங்கள்
வணங்குமு துகுன்றைப்
பித்தர்வேடம் பெருமையென்னும்
பிரமபுரத் தலைவன்
__________________________________________________
மாலை கட்டி வழிபடும் இடம் முதுகுன்றம்
என்கின்றது. கோலம் - விண்ணும் பாதலமும் ஊடுருவி
நின்ற தீப்பீழம்பாகிய வடிவம். ஏல - பொருந்த.
நாமம் - திருவைந்தெழுத்து, மூலம் உண்ட நீற்றர் - மூல
மலமாகிய ஆணவத்தின் வலிகொடுத்த
திருநீற்றினையுடைய அடியவர்கள். வாயான் - வாயில்
நாம மந்திரமாக உறைபவன்.
10. பொ-ரை: குண்டிகையை உறியில்
கட்டித் தூக்கிய கையினரும், காவியாடையைத்
தரித்தவரும், உண்டு உழல்பவரும் ஆகிய சமண
புத்தர்கள் கூறுவனவற்றை நெறிகள் எனக் கருதாது,
நாள் தோறும், சென்று வணங்குவீராக. மானை ஏந்திய
கையினனும், கப்பல்கள் ஓடும் கடலிடைப் பொங்கி
எழுந்த விடத்தை உண்டவனும், தளிர் போலும்
மேனியளாகிய உமையம்மையை ஒருகூறாக உடையவனுமாகிய
சிவபிரான் மேவியுள்ளது திருமுதுகுன்றமாகும்.
அத்திருத்தலத்தை வணங்குவீராக.
கு-ரை: சமணர் புத்தர் சொற்களைக்
கேளாதீர்கள்; இறைவனை நித்தம் தொழுங்கள்;
அவ்விறைவன் மேயது முதுகுன்றே என்கின்றது. உறி -
சமணர்கள் குண்டிகை வைத்திருக்கும் கயிற்றுறி.
சீவரம் - மஞ்சளாடை. மிண்டர் - உடல்
வலிமையுடையவர். வங்க முந்நீர் - கப்ப லோடுங்
கடல்; என்றது கடல் என்ற பொதுமைபற்றிவந்த
அடைமொழி. முறி - தளிர்.
11. பொ-ரை: தேவர் கணங்கள் பலவும்
நிறைந்து செறிந்து வணங்கும்
திருமுதுகுன்றத்திறைவனை, பித்தர் போலத் தன்
வயம்
|