பக்கம் எண் :

 53. திருமுதுகுன்றம்671


புயங்கராக மாநடத்தன்

புணர்முலைமா துமையாள்

முயங்குமார்பன் முனிவரேத்த

மேயதுமு துகுன்றே. 8

577. ஞாலமுண்ட மாலுமற்றை

நான்முகனும் மறியாக்

கோலமண்டர் சிந்தைகொள்ளா

ராயினுங்கொய் மலரால்

ஏலவிண்டை கட்டிநாம

மிசையவெப்போதுமேத்தும்

மூலமுண்ட நீற்றர்வாயான்

மேயதுமு துகுன்றே. 9

__________________________________________________

களுக்குத் தலைவனாகிய இராவணனின் தோளை நெரித்த வலிமையோடு பாம்பு நடனத்தில் விருப்புடையவனும், செறிந்த தனபாரங்களை உடைய உமையம்மையைத் தழுவிய மார்பினனும் ஆகிய சிவபிரான் முனிவர்கள் ஏத்த எழுந்தருளி விளங்கும் தலம் திருமுதுகுன்றமாகும்.

கு-ரை: மாயம்வல்லராய், வானிலும் நீரிலும் இயங்குகின்ற அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனை அடக்கிய புஜங்க நடனத்தினராகிய இறைவன் முனிவர்கள் வந்து அடிவணங்க மேயது முதுகுன்றம் என்கின்றது. புயங்கராக மா நடத்தன் - பாம்பு நடனத்தில் விருப்புடையன். புணர் முலை - இணைந்த முலை.

9. பொ-ரை: உலகங்களை உண்ட திருமாலும், நான்முகனும் அறிய முடியாத இறைவனது திருக்கோலத்தைத் தேவர்களும் அறியாதவர் ஆயினர். நாள்தோறும் கொய்த மலர்களைக் கொண்டு இண்டை முதலிய மாலைகள் தொடுத்துத் தன் திருப்பெயரையே எப்போதும் மனம் பொருந்தச் சொல்பவரும், மூலமலத்தை அழிக்கும் திருநீற்றை மெய்யிற் பூசுபவருமாகிய அடியவர்களின் வாயில், நாம மந்திரமாக உறைந்தருளுகின்ற அப்பெருமான் மேவிய தலம் திருமுதுகுன்றமாகும்.

கு-ரை: அயனும் மாலும் அறியாத வடிவைத் தேவர்கள் மனங்கொள்ள மாட்டாராயினும் ஆணவவலிகொடுத்த அடியார்கள் மலர்