பக்கம் எண் :

670திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


அழிந்தசிந்தை யந்தணாளர்க்

கறம்பொருளின் பம்வீடு

மொழிந்தவாயான் முக்கணாதி

மேயதுமு துகுன்றே. 6

* * * * * * 7

576. மயங்குமாயம் வல்லராகி

வானினொடு நீரும்

இயங்குவோருக் கிறைவனாய

விராவணன்றோ ணெரித்த

இன்பம் வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும். தாள் நினைத்து, தாள் இணைத்து என்பவும் பாடம்.

கு-ரை: கொன்றை, மதி, கங்கை முதலிய அணிந்த சென்னியோடு அந்தணர்க்கு அருமறைகளை உபதேசித்த இறைவன் மேயது திருமுதுகுன்றம் என்கின்றது. சுழிந்த - சுழிகளோடு கூடிய. தொல் அரா - பழம் பாம்பு. இதழி - கொன்றை. சழிந்த - நெருங்கிக்கிடக்கின்ற. சைவ வேடம் - தாழ்சடை வெண்ணீறு தாழ்வடம் முதலிய முனிவர் வேடத்தோடு. தாள்இணைத்து - கால்களைப் பதுமம் முதலிய ஆசனவகைகள் பொருந்தப் பின்னி. அழிந்த - செயலற்றுப்போன. சென்னி, வாயான், ஆதி மேயது எனக் கூட்டிப் பொருள் காண்க.

குருவருள்: "சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் தான் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு" என்ற பாடம் புதுவை பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவன ஆய்வுப் பதிப்பில் காணப்படுகிறது. இது சிறப்பாய் உள்ளது. ‘சைவ வேடம் தாள் நினைந்து‘ என்பதிலும் சைவவேடத்தையும் தாளையும் நினைத்து ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர் என்பது சிறக்கிறது. தாள் இணைத்து என்பதில் சிறப்புத் தோன்றவில்லை.

7. * * * * * *

8. பொ-ரை: அறிவை மயங்கச் செய்யும் மாயத்தில் வல்லவராய் வான், நீர் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கும் இயல்பினராய அரக்கர்