574. வழங்குதிங்கள் வன்னிமத்த
மாசுணமீ சணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத்
தேவர்திசை வணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க
பேய்க்கணம்பூ தஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி
மேயதுமு துகுன்றே. 5
575. சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட்
டொல்லராநல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந்
தான்நினைந் தைம்புலனும்
__________________________________________________
5. பொ-ரை: வானத்தில் சஞ்சரிக்கும்
திங்கள், வன்னியிலை ஊமத்தம் மலர், பாம்பு,
ஆகியவற்றைத் திருமுடிமீது நெருக்கமாகச் சூடி,
இமவான் மகளாகிய உமையவள் காணத் தேவர்கள்
எல்லாத திசைகளிலும் நின்று வணங்க, மொந்தை,
தக்கை, ஆகியன அருகில் ஒலிக்க, பேய்க்கணங்கள்
பூதங்கள் சூழ்ந்து விளங்க, முழங்கும் செந்தீயைக்
கையில் ஏந்தி ஆடும் சிவபெருமான் மேவிய தலம்
திருமுதுகுன்றமாகும்.
கு-ரை: பாம்பு மதி
முதலியவற்றைச்சூடிக்கொண்டு மலைமகள்காண இறைவன்
ஆடியமர்ந்த இடம் முதுகுன்றம் என்கின்றது. வழங்கு
திங்கள் - வானமண்டலத்து ஊடறுத்துச் செல்லும்
சந்திரன், வன்னி - வன்னிமரத்து இலை. மாசுணம் -
பாம்பு. மீசணவி - சிரத்தின்மேற் கலந்து.
செழுங்கல் வேந்தன் - வளப்பமான மலையரசன்.
தழங்கும் - ஒலிக்கின்ற. மொந்தை - ஒரு முகப்பறை
வகைகளில் ஒன்று. தக்கை - இருமுகப்பறை வகையில்
ஒன்று; உடுக்கையும் ஆம்.
6. பொ-ரை: சுழிகளோடு கூடிய கங்கை,
அதன்கண் தோய்ந்த திங்கள், பழமையான பாம்பு,
நல்ல கொன்றை மலர் ஆகியன நெருங்கிய சென்னியை
உடைய முக்கண் ஆதியாகிய சிவபிரானுடைய
சைவவேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும்
மனமும் அழிந்த சிந்தையினராகிய சனகர் முதலிய
அந்தணாளர்கட்கு அறம் பொருள்
|