சீரிதாகப் பலிகொள்செல்வன்
செற்றலுந்தோன் றியதோர்
மூரிநாகத் துரிவைபோர்த்தான்
மேயதுமு துகுன்றே. 3
573. பாடுவாருக் கருளுமெந்தை
பனிமுதுபௌ வமுந்நீர்
நீடுபாரு முழுதுமோடி
யண்டர்நிலை கெடலும்
நாடுதானு மூடுமோடி
ஞாலமுநான் முகனும்
ஊடுகாண மூடும்வெள்ளத்
துயர்ந்ததுமு துகுன்றே. 4
__________________________________________________
தன்னைச் சினந்து வந்த வலிய
யானையைக் கொன்று அதன் தோலைப்
போர்த்தியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய
தலம் திருமுதுகுன்றம்.
கு-ரை: கங்கை மதி முதலியன சூடி,
உமையொருபாகனாய், பலி ஏற்றுண்ணும் பரமன்
விரும்பும் இடம் முதுகுன்றம் என்கின்றது. வாரி -
கங்கை. மாகம் - ஆகாயம். வாள் - ஒளி. நாரி - பொண்;
உமையம்மை. செற்றலும் - கோபித்தலும். மூரிநாகம் -
வலிய யானை.
4. பொ-ரை: தன்னைப் பாடிப்
பரவுவார்க்கு அருள் செய்யும் எந்தையாகிய
சிவபிரான் எழுந்தருளிய தலம், குளிர்ந்த பழமையான
கடல் நீண்ட மண் உலகிலும் தேவர் உலகிலும் பரவி,
அவர்தம் இருப்பிடங்களை அழித்ததோடு நாடுகளிலும்
அவற்றின் இடையிலும் ஓடி, ஞாலத்துள்ளாரும்
நான்முகன் முதலிய தேவரும் உயிர் பிழைக்க
வழிதேடும்படி, ஊழி வெள்ளமாய்ப் பெருகிய
காலத்திலும் அழியாது உயர்ந்து நிற்பதாகிய,
திருமுதுகுன்றமாகும்.
கு-ரை: பாடும் அடியார்க்கருளும் எந்தை
எழுந்தருளியுள்ளது ஊழிக்காலத்தும் அழியாத
முதுகுன்றே என்கின்றது. பனி முது பௌவம் - குளிர்ந்த
தொன்மையான கடல். பார் - பூமி, அண்டர் - தேவர்.
நாடுதானும் ஊடும் ஓடி - நாடுகளிலும், அவற்றின்
இடையிலும் பரந்து, ஊடுகாண - இடைவெளி காண.
ஊழியிலுயர்ந்த குன்று என்றது.
|