571. பற்றுமாகி வானுளோர்க்குப்
பல்கதிரோன் மதிபார்
எற்றுநீர்தீக் காலுமேலை
விண்ணியமா னனோடு
மற்றுமாதோர் பல்லுயிராய்
மாலயனும் மறைகள்
முற்றுமாகி வேறுமானான்
மேயதுமு துகுன்றே. 2
572. வாரிமாகம் வைகுதிங்கள்
வாளரவஞ் சூடி
நாரிபாக நயந்துபூமேல்
நான்முகன்றன் தலையில்
__________________________________________________
குருவருள்: இப்பாடல் இறைவன்
எல்லாவற்றிலும் கலந்து ஒன்றாய் இருந்து அருள்
செய்யும் திறனைக் குறிக்கிறது.
2. பொ-ரை: தேவர்கட்குப் பற்றுக்
கோடாகியும், பல வண்ணக் கதிர்களை உடைய ஞாயிறு,
திங்கள் மண், கரையை மோதும் நீர், தீ, காற்று,
மேலே உள்ள ஆகாயம், உயிர் ஆகிய அட்ட
மூர்த்தங்களாகியும் எல்லா உயிர்களாகியும்
திருமால், பிரமன் வேதங்கள் முதலான
அனைத்துமாகியும் இவற்றின் வேறானவனும் ஆகிய
சிவபிரான் எழுந்தருளியிருக்கும் தலம்
திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை: அட்டமூர்த்தி வடிவாயும்,
பல்லுயிராயும், மால் அயன்மறைகள் எல்லாம்
ஆகியும் உள்ளவர்மேவிய முதுகுன்று என்கின்றது.
வானுளோர்க்குப் பற்றும் ஆகி - தேவர்களுக்குப்
பற்றப்படும் பொருளாகியும் . எற்றுநரர் - கரையை
மோதுகின்ற நீர், கால் - காற்று. மேலை விண் -
மேலதாகிய ஆகாயம். இயமானன் - புருடன். மற்று, மாது,
ஓர் இம்மூன்றும் அசை. முற்றும் ஆகி - இவையெல்லாம்
ஆகி. வேறும் ஆனான் - இவற்றின் வேறாயும்
இருப்பவன்.
3. பொ-ரை: கங்கை, வானகத்தே வைகும்
திங்கள், ஒளி பொருந்திய பாம்பு ஆகியவற்றை
முடிமிசைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி
ஏற்று, தாமரை மலரில் உறையும் பிரமனது தலைகளில்
ஒன்றைக் கொய்து அத்தலையோட்டில் பலி ஏற்கச்
செல்பவனும்,
|