பக்கம் எண் :

 54. திருவோத்தூர்675


581. இடையீர் போகா விளமுலை யாளையோர்
புடையீரேபுளிள் மானுரி
உடையீ ரேயும்மை யேத்துது மோத்தூர்ச்
சடையீ ரேயும தாளே. 2

582. உள்வோர் போல நொடிமையி னார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே. 3

__________________________________________________

கு-ரை: ஓத்தூர் மேயகூத்தரே, பூவேந்தி உம் பொன்னடி போற்றாதார் இல்லை என்கின்றது. பூதேர்ந்து - வண்டு, ஈக்கடி எச்சம், முடக்கு முதலிய குற்றமில்லாத பூக்களை ஆராய்ந்து. ஆயன - பூசைக்கு வேண்டிய உபகரணங்கள்.

2. பொ-ரை: திருஓத்தூரில் சடைமுடியோடு விளங்கும் இறைவரே, ஈர்க்கு இடையில் செல்லாத நெருக்கமான இளமுலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, புள்ளிமான் தோலை ஆடையாக உடுத்தியவரே, உம் திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

கு-ரை: இள முலையுமையாள் பாகரே, மான்தோல் உடையீரே, உம்மை வணங்கிறோம் என்கின்றது. இடையீர் போகா இள முலை - இரண்டு முலைகளுக்கும் இடையில் ஈர்க்கு நுழையாத இளமுலை. ‘ஈர்க்கிடைபோகா இளமுலை’ என்ற திருவாசகமும் நோக்குக. புடையீர் - பக்கத்துடையவரே!

3. பொ-ரை: ஒளிசிறந்த வாழைக் கனிகள் தேன் போன்ற சாற்றைச் சொரியும் திருவோத்தூரில் அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே, உம் காதல் மிக நன்று. பொய் பேசும் இயல்பினராய் அடியார்களை நினைப்பவரைப் போலக் காட்டி அவரை ஏற்றுக் கொள்வீர்.

கு-ரை: ஓத்தூர்க் கள்ளரே! உம்முடைய காதல் நன்றாயிருக்கிறது என்கின்றது. உள்வேர் போல - நினைப்பரர்போல. உள்வீர் என்பது பாடம். நொடிமையினார்திறம் - பொய்யாகப் பேசுபவருடைய தன்மையை. அல்குல் - அரை.