583. தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துது மோத்தூர்
நாட்டீ ரேயரு ணல்குமே. 4
584. குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயரு ணல்குமே. 5
585. மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயரு ணல்குமே. 6
__________________________________________________
4. பொ-ரை: செங்காந்தட்பூவை
அணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலை
நாகத்தை ஆட்டுபவரே! அடியவர் வினைகளை ஓட்டுபவரே!
திருவோத்தூர் நாட்டில் எழுந்தருளியவரே! உம்மைத்
துதிக்கின்றோம்; அருள்புரிவீராக.
கு-ரை: உம்மை ஏத்துவோம்; அருளும்
என்கின்றது. தோட்டீர் - செங்காந்தள்
பூவையணிந்தவரே. துத்தி - படப்பொறி.
5. பொ-ரை: குழையணிந்த காதினை
உடையவரே, கொடிய மழு என்னும் வாட்படையை ஒருபாலுள்ள
கரத்தில் ஏந்தி ஆள்பவரே. திருவோத்தூரில் பிழை
நேராதபடி வண்ணப் பாடல்கள் பல பாடி நின்று ஆடும்
அடியார்க்கு அழையாமலே வந்து அருள் நல்குவீராக.
கு-ரை: பாடி, ஆடும் அடியார்களுக்கு
அவர்கள் அழையாமலே வந்து அருளும் என்கின்றது. உழை -
பக்கம். பிழையா - தவறாதபடி. வண்ணங்கள் - தா
அவண்ணம் முதலிய வண்ணப்பாடல்கள். அழையாமே
நல்கல் முதல்வள்ளல் ஆவார் கடமையென்று விண்ணப்
பித்தவாறு.
6. பொ-ரை: திருவோத்தூரில்
மகிழ்ந்து உறையும் இறைவரே, நீர் பலி கொள்ள
வருங்காலத்து, உம் திருமுன் அன்பு மிக்கவராய்
|