பக்கம் எண் :

 54. திருவோத்தூர்679


586. தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா வென்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயரு ணல்குமே. 7

587. என்றா னிம்மலை யென்ற வரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ் னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே. 8

__________________________________________________

விரும்பி வந்து பலியிடுதற்குத் தம் மக்களுள் மகளிரை அனுப்புதற்கு அஞ்சாத தந்தை தாயர் உளரோ? எவ்வாறேனும் ஆக, அவர் தமக்கு அருள் நல்குவரராக.

கு-ரை: நீர் பலியேற்க வந்தகாலத்து, தம் மக்களுள் உம்முன்வந்து பலியிடத்தக்கவர் யார் என்று அஞ்சாதார் உளரோ; அருள் நல்கும் என்கின்றது. இறைவன்கொண்ட விடவேடத்தில் ஈடுபட்டவர்கள் மயங்கித் தன்வசம் அழிந்தமையின் அவர் அண்மைக்கண் நடந்து வந்து பிச்சைபோடத் தக்கார் யார் என்று அஞ்சாதார் உளரோ என்று கூறியதாம். நக்கீரே - மகிழ்ந்திருப்பவரே.

7. பொ-ரை: திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! என்றழைத்து உமது அழகினைப்புகழ்ந்து ஓதாதவர் உளரோ? அருள் நல்குவீராக.

கு-ரை: கொன்றை விளங்கு முடியுடைநாதா என்று ஓதார்யார்? அருள் நல்கும் என்கின்றது. தாது - மகரந்தம். ஆதீர் - முதற்பொருளாயுள்ளவரே.

8. பொ-ரை: இக்கயிலைமலை எம்மாத்திரம் என்று கூறிய இராவணனைக் கால்விரலால் வென்றவரும், தம்மோடு மனம் பொருந்தாத திரிபுரத்தசுரர்தம் மும்மதில்களைக் கணையால் எய்து அழித்தவருமாகிய சிவபிரானது திருவோத்தூர் என்று ஊர்ப் பெயரைச் சொன்ன அளவில் சொல்லிய அவர்மேல் உள்ள வினைகள் போகும்.

கு-ரை: ஓத்தூர் என்றார்மேல் உள்ள வினைகெடும் என்