588. நன்றாநான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே. 9
589. கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்
சரீ வன்கழல் சேர்மினே. 10
__________________________________________________
கின்றது. என்தான் - எம்மாத்திரம்.
ஒன்னார் - பகைவர். என்றார் மேல்வினை ஏகும்
என்றும், என்றார்மேல் வினை ஏகும் என்றும்
பிரித்துப் பொருள் கொள்ளலாம்.
9. பொ-ரை: திருவோத்தூரில்
விளங்கும் இறைவரே! நல்லன செய்யும் நான்கு
வேதங்களை ஓதுபவனாகிய பிரமன், திருமால்
ஆகியோர் எரியுருவாய் நீர் ஒன்றுபட்டுத்
தோன்றவும், அறியாராய் திசையனைத்தும் தேடித்
திரிந்து எய்த்தனர் அவர்தம் அறிவுநிலையாதோ?
கு-ரை: அயனும் மாலும் உம்மைத் தேடித்
திசையெல்லாம் சென்றார்போலும் என்று
நகைசெய்கின்றது. நன்றாம் நான் மறையான் என்றது
நல்லனசெய்யும் நான்மறைகளை ஓதியும் அவன்
அறிந்திலன் எனக் குறிப்பித்தபடி. ஒன்றாயும் -
பெருஞ்சோதிப் பொருளாயும். நேரில் இருந்தும்
காணாது திசையெல்லாந் தேடினர்; அவர்கள் அறிவு
இருந்தபடி என்னே என்று நகைசெய்தவாறு.
10. பொ-ரை: கரிய நிறத்தவராகிய
சமணர்களும், கலிங்க நாட்டத்துவர் ஏற்றிய அடையை
அணிந்த புத்தத் துறவியரும் கூறும் பொய் மொழிகளை
நம்பாதீர். முப்புரங்களை ஓரம்பினால் எய்து
அழித்தவனாகிய, திருவோத்தூரில விளங்கும் சிறப்பு
மிக்க சிவபிரானின் கழல்களைச் சேர்வீர்களாக.
கு-ரை: ஓரம்பால் எயில் எய்தவன்
காழல்சேருங்கள்; புத்தர் சமணர் பொய்யுரை
கேளாதீர்கள் என அறிவுரத்தவாறு. தேரர் -
பௌத்தர். கலியங்கத்துவராடையர் - துவர் ஏற்றிய
கலிங்கநாட்டு ஆடையையுடைய புத்தர்கள்.
|