633. வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தனசொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே. 11
திருச்சிற்றம்பலம்
_______________________________________________
உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர்.
அனைத்துலகையும் காத்தருள் கின்றவனாகிய
சிவபிரான் உறைகின்ற திருக்கரவீரத்து
அடியவர்க்கு அல்லல் இல்லை.
கு-ரை: கரவீரத்தடியவர்க்கு அல்லல்
இல்லை என்கின்றது. செடி - நாற்றம். அமணொடு என்பது
அமண்ணொடு என விரித்தல் விகாரம் பெற்றது.
சீவரம் - காவியாடை. கொடிய வெவ்வுரை - நெறியல்லா
நெறிக்கண் செலுத்தலின் கொடிய வெம்மையான உரை
யாயிற்று. கடியவன் - காத்தலையுடையவன்.
11. பொ-ரை: அழிலில்லதாவனாக
விளங்கும் திருக்கரவீரத்துப் பெரியோன் மேல்
அன்புக்கசிவால் தமிழை விரும்பும் ஞானசம்பந்தன்
சொல்லிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய
இவற்றைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.
கு-ரை: இது பாடுவார்க்குப் பாவமே
இல்லை என்று கீழ்ப்போன திருப்பாடல்களில்
தனித்தினியாகக் கூறியவற்றைத் தொகுத்துப்
பயனாகக் கூறியது. சேடன் - பெருமையுடையவன். வீடிலான்
- அழிவில்லாதான். கட்டுடையார்க்கே வீடும் உண்டு
ஆதலின் இயற்கையிலேயே கட்டிலாத இறைவன்
வீடிலாதான் எனப்பட்டான். அழிவில்லாதவன்
எனலுமாம்.
பஞ்சாக்கர மாலை
கல்லேன் பிறநூல்கள் காழியர்கோன்
பாட்டல்லால்
சொல்லேன் சுரரைத் தொழநினையே -
னல்லசிறு
செஞ்சதங்கை கொஞ்சுதண்டைச்
சிற்றடிக்கன் பாகவெழுத்
தஞ்சதங்கை யாமலக மாம்.
- கண்ணுடைய
வள்ளலார்.
|
|