630. புனலி லங்கையர் கோன்முடி
பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே. 8
631. வெள்ளத் தாமரை யானொடு
மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை யோயுமே. 9
632. செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே. 10
_______________________________________________
8. பொ-ரை: கடலால் சூழப்பட்ட
இலங்கை மக்களின் தலைவனாகிய இராவணனின் தலைகள்
பத்தும் நெரியுமாறு செய்து, கோபத்தோடு கூடிய அவனது
ஆண்மையை அழித்தவனாய், எரிபோலும் உருவினன்
ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கரவீரம் என்று
சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை.
கு-ரை: கரவரரம் என்பார்க்கு இடர்
இல்லை என்கின்றது. புனல் இலங்கை - கடல்சூழ்ந்த
இலங்கை. சின வல் ஆண்மை - கோபத்தோடு கூடிய வலிய
ஆண்மை. செகுத்தவன் - அழித்தவன்.
9. பொ-ரை: நீரில் தோன்றும் தாமரை
மலர் மேல் உறையும் நான் முகனோடு திருமாலும்
உண்மையைத் தெளியுமாறு ஒளிப் பிழம்பாகத்
தோன்றி அவர்கள் அறியாவாறு கள்ளம்
செய்தவனாகிய சிவபிரான் உறையும்
திருக்கரவீத்தை நினைத்து போற்ற வினைகள்
நீங்கும்.
கு-ரை: கரவீரத்தைத் தியானிக்க
வினைவலி குன்றும் என்கின்றது. வெள்ளத்தாமரையான்
- நீரில் இருக்கும் தாமரையானாகிய பிரமன்.
வெள்ளத்தாமரை என்றது சாதியடை. பிரமனிருக்கும்
தாமரை உந்தித்தாமரையாயினும் தாமரையென்ற
பொதுமை நோக்கிக் கூறப் பட்டது. தான்; அசை.
10. பொ-ரை: முடைநாற்றம் வீசும்
அமணர்களோ காவியாடை அணிந்து திரியும்
புத்தர்கள் ஆகியயோர்தம் கொடிய வெம்மையான
|